Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துகள்


எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
அஷ்வின்ஜி

Sunday, November 8, 2009

சிவனின் புகழ் பாடும் ஐந்தெழுத்து மந்திரம்.

நமசிவாய யநமசிவ வயநமசி மசிவயந சிவாயநம
 
நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் 
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே.

உய்வார்கள் உய்யும் வகை: “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?
சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி இன்பத்தை நம்மை நுகர வைக்க முடியாது. அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.
இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறி பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.
இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.
“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து, இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின் பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன் அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.” - யசுர் வேதம்.
இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.
கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமான் தூல மந்திரம், “நம:சிவாய” என்ற ஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
உலகம் முழுமையும் பரவியிருந்த காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப் படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.
இவ்வாறு முதன்மையானதும் தூயதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர்

காஞ்சி மகாப் பெரியவாளின் அமுதமொழிகள் - 3


41. பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். ‘இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.
42. பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).
43. பரமேச்வரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிகாரத்துக்கு சுலபமான மார்க்கம் இருப்பதாகச் சொன்னேன். அது இந்த ஸ்மரணந்தான். ப்ரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும். பெரியவர்கள் - சிஷ்டர்கள் சாயங்காலத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட பரமேச்வரன் சகல வேத சாஸ்த்திரங்களின் தாத்பர்யமாகிற ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரந் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.
44. நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.
குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேச்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேச்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்.
45. சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்.
46. எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.
47. ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால் அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற கேள்விக்குப் பதிலாகக் கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உன்ன உபதேசம் பண்ணுகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். “அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய இருதயத்திற்குள்ளும் இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறார். நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன் இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல் இருக்கிற தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த ஈச்வரன் தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருத்தேசத்திலும் இருக்கிறான் என்று கண்ணபிரான் உபதேசம் செய்கிறார்.


 - ஹர ஹர மஹாதேவா -

அருள்மொழி அமுதம் முற்றிற்று
நன்றி: சைவம் டாட் ஆர்க்

காஞ்சி மகாப் பெரியவாளின் அமுத மொழிகள் -2


17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.
18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.
20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.
21. உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார்.
22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார். மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த ஈசனே நடனமாடுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக் கொடுக்கும் தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார். இவைகளெல்லாம் பரமசிவனின் திருக்கோலங்கள்.
23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.
24. சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.
25. கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.
26. உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை அவன் தரித்துக் கொண்டிருக்கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம். உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.
27. பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே.
28. ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.
29. அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.
30. உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.
31. சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.
32. பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவகாரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடுகின்றன. ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.
33. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
34. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.
35. நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
36. ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.
37. ‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.
38. சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.
39. ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜா. அவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு சூத்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்திக் கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.
40. ‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.
(தொடரும்..)

நன்றி: சைவம் டாட் ஆர்க்

Friday, November 6, 2009

காஞ்சி மகாப் பெரியவாளின் அமுத மொழிகள்

 சிவமயம்


1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.
8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.
9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)
10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.
12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.
13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.
14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.
15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.
16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால் சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர் உயிர் ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று சொல்வர். பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான். ‘சரீரம் த்வம் சம்போ:’ என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.
 (தொடரும்..)
நன்றி: சைவம்.ஓர்க் வலை தளம்.

பசு பராமரிப்பு - தாயாக விளங்கும் பசு (காஞ்சி மஹா பெரியவர் அருளியது)

வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சார்ந்ததே பசு. அப்படியிருந்தாலும் அது "அம்மா" என்று அடி வயிற்றிலிருந்து வாய் விட்டுக் குரல் கொடுக்கிறது. "அம்மா" என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. 

அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பது தான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரiக்ஷ தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. 

ரொம்பவும் வயதான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் இருக்கிறது. நம்முடைய ஆயுளின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடை யஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து "கோமாதா" என்றே சொல்வது.

"கோ" என்றால் "பசு" என்று எல்லோருக்கும் தெரியும்.

அந்த "கோ"வை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்று தொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.

அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.

பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில் தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்
(நன்றி: வெப்துனியா )

என் குறிப்பு:
என்றும் வயதான பசுக்களை பாதுகாக்கும் இறைபணியில் சென்னை-77, திருவேற்காட்டில் 'பசு மடம்' ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் நான் நேரில் சென்று பசுக்களுக்கு ஒரு பிடி புல்லும், வைக்கோலும் ஊட்டினேன். என்னால் இயன்ற பொருளுதவியும் செய்தேன். மிகச் சிறப்பாக வயதான பசுக்களை பராமரிக்கிறார்கள். பசுக்கள், கன்றுக்குட்டிகள் நடுவே சென்ற பொது அவைகள் 'அம்மா' என்று வாஞ்சையுடன் குரல் கொடுத்தபோது எனக்கு அழுகையே வந்து விட்டது. நம்பிக்கை குழு அன்பர்கள் பசு மடம் செய்து வரும் சேவைக்கு ஆதரவு தரவிரும்பினால் தரலாம்.

Saturday, October 31, 2009

அற்புதத்தில் அற்புதம் (ஓஷோ பேசுகிறார்)

சீடன் நம்பவேண்டும். சந்தேகப்படக் கூடாது. குருவுக்கு முன்னால் கவசத்தை முற்றிலுமாக கழட்டிவிட வேண்டிவரும். பரிபூரண நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் ரகசியங்கள் வெளியாகும். அப்போதுதான் சாவிகள் உங்களுக்கு வழங்கப்படும். 


நீங்கள் உங்களை மறைத்து வைத்துக்கொண்டால் நீங்கள் குருவுடன் மோதுவதாக அர்த்தம். சரணாகதியே திறவுகோல். போராட்டமன்று.


நம்புவது என்பது இரு கண்களும் மூடிக்கொள்ளுவது. கண்கள் திறந்திருந்தபோது வெளியே நோக்கிச்செயல் படவேண்டிய ஆற்றல் கண்களை மூடிக்கொண்டதும் பின்னுக்குத் திரும்புகிறது. மாற்றம் நிகழ்கிறது. அந்தச் சக்திதான் உங்கள் மூன்றாம் விழியைத் தாக்குகிறது. மூன்றாம் விழி ஒரு பருப் பொருள் அன்று. வெளிப்பாய்ந்த சக்தி தன மூலத்தை (ஆதாரத்தை) நோக்கிப் பாய்வதுதான் அது. அதுதான் மூன்றாம் விழி. இந்த உலகத்தைப் பார்க்கும் மூன்றாவது விழி அதுதான். உடல்தான் உடலால் பிறக்கும். உள்ளார்ந்த சுயம் உடலால் தோன்றாது. அது தெய்வ அனுக்கிரகத்தினால் பிறப்பது. அதைக் காண வேறு மாதிரியான கண்கள்/செவிகள் வேண்டும். நுட்பமான அம்சம் அது.


சந்தேக மனமே பின்னால் திரும்பிப் பார்க்கும். அப்போதும் மாற்றுத் தேடும். செய்யாமல் விடுபட்டது என்ன? செய்தது சரிதானா? என்றெல்லாம் சந்தேகம் கொள்ளும். ஆன்மீகத்தில் சந்தேகம் இருந்தால் உங்களுக்கு பதில் கொடுக்கவேண்டிய இதயத்தின் கதவுகள் மூடிக்கொள்ளும்.


தொழில் நுட்பம் வசதிகளை உருவாக்கி விட்டது. தவிரவும் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து உங்களை ஒழித்துக் கட்டியும் விட்டது. தொழில் நுட்பம் நல்ல வீடுகளை உருவாக்கியது. நல்ல மனிதரை உருவாக்கவில்லை. காரணம் நல்ல மனிதரை உருவாக்க வேறு ஒரு பரிணாமம் தேவைப் படுகிறது. அது இயந்திரவியல், தொழில் நுட்பம் சம்பந்தப் பட்டதல்ல. அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது. அறிவியலால் ஒரு புத்தரையோ, யேசுவையோ உருவாக்க முடியாது.


எப்போது ஒரு வினா களங்கமற்றதாகும்? கேட்பவரிடம் பதில் இருந்தால் அது களங்கமற்றதன்று. உதாரணமாக கடவுள் இருக்கிறாரா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், உங்களிடம் அதற்கு பதில் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக என்னைக் கேட்கிறீர்கள். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர் நீங்கள். எனக்கு தெரியுமா தெரியாதா என்று பார்க்க (சீண்டி விட) என்னை பார்த்து அப்படி கேட்கிறீர்கள். உங்களிடம் பதில் இருந்தால் உங்கள் வினா தந்திரமானது.


வினாக்கள் இரண்டு வகை: அறிந்து கேட்பது ஒருவகை. இது பயனற்றது. இதில் விவாதங்கள் பிறக்கும். உரையாடல் சாத்தியமில்லை. அறியாமல் கேட்பது இரண்டாவது வகை. விடை தெரியாது என்று தெளிவைத் தெரிந்து கேட்கும்போது நீங்கள் அந்த வினாவின் மூலம் சீடர் ஆகிவிடுகிறீர்கள்.


சீடர் என்றாலே தங்களுக்குத் தெரியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.

Sunday, October 25, 2009

உணர்ச்சிகள் - ஒரு உவமைக்கதை

''இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி, நீல பனிப்படலம் போர்த்தியிருக்கும் மலையை நான் பார்க்கிறேன். மலை எவ்வளவு அழகாக இருக்கிறது?'' -- கண்கள் தன்னை மறந்து சொல்லின.

காது அதைக் கேட்டது. கூர்மையான கவனத்துடன் சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் காது சொன்னது: ''எங்கே இருக்கு மலை? என்னால் அதைக் கேட்க முடியலயே!''

மலையை அறிந்து கொள்ளவும், தொடவும் நானும் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோசனமும் இல்லையே. மலையை என்னால் தொட முடியலே'' - சொன்னது உள்ளங்கை.

''மலையே இல்லே! என்னாலே வாசனையை உணரவே முடியல..'' -மூக்கு தன் நிலையைச் சொன்னது.

அப்போது கண்கள் மறு பக்கமாகத் திரும்பி அழகை ரசிக்க ஆரம்பித்தன. எல்லோரும் சேர்ந்து கண்களின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பலவாறு விமர்சிக்க ஆரம்பித்தார்கள். 

கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்: ''கண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை.''
(கலீல் கிப்ரானின் குட்டிக் கதை)

ஆடைகள்

ஒருநாள் அழகும் அசிங்கமும் கடற்கரையில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டன. ''நாம் ஒன்றாய்க் கடலில் குளிப்போம்'' என்று கூறி தாம் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்து விட்டு கடலில் இறங்கி நன்றாய் நீந்திக் குளித்தன. சற்று நேரம் சென்ற பின்னர் அசிங்கம் கரைக்கு வந்தது. அழகின் ஆடைகளை உடுத்திக் கொண்டு அழகிடம் சொல்லிக் கொள்ளாமல் நடையை கட்டியது. குளித்த பின்னர் அழகு கரைக்கு வந்து பார்த்த போது அதன் ஆடைகளைக் காணாமல் திகைத்தது. வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு திரும்ப நடந்தது. அதன் பிறகுதான் ஆண்களும், பெண்களும் அழகையும் அசிங்கத்தையும் தவறாக அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். ஆடையை மட்டும் பார்த்தவர்கள் அசிங்கத்துக்கு மரியாதை தந்தார்கள். அழகை உதாசீனம் செய்தார்கள். எனினும், ஆடையைப் பார்க்காமல் அழகின் முகத்தை பார்க்கிறவர்கள் சிலராவது அழகை அடையாளம் கண்டுகொண்டு அதற்குரிய அங்கீகாரத்தினை தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அசிங்கத்தின் முகத்தினைப் பார்த்து உண்மையை உணருபவர்கள் இப்போதும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
ஆடைகளால் அசிங்கத்தையோ அழகையோ ஒருபோதும் மறைத்து விட முடியாது.
(நன்றி: கலீல் கிப்ரானின் நூறு குட்டிக்கதைகள், தையல் வெளியீடு, சென்னை)

Thursday, October 22, 2009

பீஜாட்சரம் என்றால் என்ன?

பீஜம் என்றால் அடி, ஆரம்பம், நுனி. தோன்றும் இடம். அட்சரம் என்றால் வார்த்தை, சப்தம். உலகில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு சப்தம் இருக்கின்றது. அந்த அசைவின் அடி, அந்த அசைவின் நுனி, அந்த அசைவின் கரு இவைகளிலிருந்து அந்த சப்தம் கிளம்புகிறது. அந்த சப்தத்திற்குதான், அந்த அசைவிற்குதான் பீஜாட்சரம் என்று பெயர். உதாரணமாக ஹ்ருதயம் அசைகிறது. அந்த ஹ்ருதயத்தினுடைய சப்தம் என்ன என்பதை கவனித்திருக்கிறார்கள். "செளஹு" என்ற சப்தம் ஹ்ருதயத்தின் சப்தம். மூளையினுடைய சப்தம் என்ன என்று கவனித்திருக்கிறார்கள். "ரும்" என்பது மூளையின் சப்தம். இதை போல நாடி நரம்புகளுக்கு, நுரையீரல்களுக்கு, வயிற்றுக்கு, தொண்டைக்குழிக்கு, முதுகெலும்பின் அடிப்பகுதிக்கு என்று பல சப்தங்கள் உண்டு. இந்த வெளியுனுடைய சப்தம் "ஓம்". இந்த "அஉம்" என்ற சப்தம் தான் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது. இது எப்பொழுதோ ஏற்பட்ட அசைவினால் தொடர்ந்து கேட்கின்ற சப்தம். ஒரு அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி, அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எப்பொழுது துவங்கியது என்று யோசித்து தடம் பார்த்து போக ஒரு பீஜத்தில், ஒரு கருவில், ஒரு நுனியில் முடியும். அங்கிருந்து தோன்றிய சப்தம் என்பதால் அதற்கு பீஜாட்சரம் என்று பெயர். இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. இதை யோசித்து, யோசித்து, யோசித்து அடி ஆழம் போய் உணர்வதின் மூலம் இதை ஒரு வேளை புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.
நன்றி : http://balakumaranpesukirar.blogspot.com/

Monday, October 19, 2009

வயதான பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?

(எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில் சொல்லுகிறார்:) 
சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
நன்றி: http://balakumaranpesukirar.blogspot.com/

ஐம்பதைத் தாண்டி..


எல்லோருக்கும், அன்பு வணக்கம்.
வலைப் பதிவுக்கு புதியவனான நான் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான் பதிவுகளைத் துவக்கினேன். சுய முயற்சியுடன் சேர்ந்து பல நலம் விரும்பிகள் ஊக்கமளித்ததாலும், பரசிவனின் அருளாலும், ஐம்பதைத் தாண்டியுள்ளேன்.சுயமாக எதையும் நான் எழுதவில்லை என்றாலும், படித்ததில் என்னைக் கவர்ந்ததை ஒரே கருத்துக் கொண்ட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் வெளியீடுகளை பதிவு செய்கிறேன்.

எல்லோருக்கும் நன்றி. விழைவது தொடர்ந்த நல்லாதரவு.
அஷ்வின் ஜி

வியத்தகு காட்சி - யோகா செய்யும் பெண்மணி

யோகாசனம் - ஆச்சர்யமூட்டும் குழந்தை.

Sunday, October 18, 2009

படைத்தவன் மடியில்...

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார்.
அப்போது ஒரு விஞ்ஞானி வந்து, "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை,ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் எங்களுக்கு கற்றுத் தந்து  விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்த படைப்புத் தொழிலை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.
"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.
"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.
அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம். உடனே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.
அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ தயாரித்த உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.
(இணையத்தில் இரசித்த நல்ல நகைச்சுவை)

Saturday, October 17, 2009

யோகவாசிஷடம்-3 ஜால வித்தை

மனம் நினைத்தால் நெடும் தூரம் கூட பக்கமாகத் தோன்றும். ஓர் நிமிடம் ஒரு யுகமாய்த் தோன்றும். ஓர் யுகம் ஒரு நிமிடமாகவும் தோன்றும். உலகம் எப்படி மாயமானது, ஜாலவித்தை போன்றது என்பதை யோகவாசிஷ்டத்தில் வரும் ஒரு கதை மிக அழகாக விளக்குகிறது.


இந்தப் பரந்த உலகில் நல்ல வளமிக்க, 'உத்திர பாண்டவம்' என்ற நாடு உள்ளது. அந்த நாட்டை 'லவணன்' என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் ராஜா ஹரிச்சந்திரன் பரம்பரையைச் சேர்ந்தவர். சூரியன் போன்ற ஒளி மிக்கவர். எப்படி பூவின் வாசனை எங்கும் பரவுமோ அது போல அவரது புகழும் எங்கும் பரவி இருந்தது. சொல்லிலும் செயலிலும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருந்தார்.

ஒரு நாள், அவர் அரச சபையிலிருந்த போது சம்பரிகன் என்ற ஓர் மாயாஜாலக்காரன் உள்ளே நுழைந்து, மன்னனைப் பார்த்து, இந்த ஜால வித்தையைக் காணுங்கள் என்று கூறி, மன்னரின் முன் மயில் இறகுகளை ஆட்டினான். மன்னர் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்.

அதே நேரத்தில் சிந்து நாட்டு மன்னர் அரச மண்டபத்துக்குள் நுழைவதைக் கண்டார். அந்த மன்னருடன் வேகமாக ஓடக் கூடிய ஒரு குதிரையும் வந்தது. வந்த மன்னர் லவணனைப் பார்த்து, 'இந்தக் குதிரை மிகவும் சிறந்தது. இந்திரனின் குதிரையான 'உச்சைசிரவஸ்' போன்றது. உங்களுக்கு இதை அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். இது உங்களிடமிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்' என்று கூறினார். மாயஜாலக்காரன், 'மன்னரே, குதிரையின் மீது ஏறி சவாரி செய்யுங்கள்', என்று கூறினான்.

குதிரையைப் பார்த்த மன்னர் அப்படியே அசைவற்று சுவரில் வரைந்த சித்திரம் போல ஆகி விட்டார். அரசர் அந்த நிலையில் நீண்ட நேரம் தன்னை மறந்த நிலையில் இருந்தார். மந்திரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அரசரின் நிலை கண்டு ஒருவித  பயத்திலிருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து மன்னர் தன் சுயநினைவுக்கு வந்தார்.

மந்திரிகளும், ஆலோசகர்களும் மன்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆவலோடு இருந்தார்கள். மன்னரை வணங்கி, 'மனவலிமையுடைய நீங்கள் எப்படி மயங்கினீர்கள்? திடமனதுடையவர்கள் சாதாரணமாக ஏமாற்றம் அடைய மாட்டார்களே' என்று வினவினார்கள். 

மன்னர் கூறினார், 'மதிப்புக்குரிய மந்திரிகளே! நான் கண்ட காட்சியைப் பற்றிக் கேளுங்கள். ஜால வித்தைக்காரன் மயில் தோகையை வீசியதை அடுத்து நான் அந்தக் குதிரையின் மீதேறி சவாரி செய்தேன். குதிரை பல காதங்கள் ஓடி ஒரு காட்டை அடைந்தது. அந்தக் காடு தீயால் எரிக்கப்பட்டிருந்ததைப் போன்று காணப்பட்டது. பறவைகள், மரங்கள், நீர் போன்ற எதுவுமே காணப்படவில்லை. 

அந்தக் காட்டில் மனவருத்தத்துடன் சூரிய அஸ்தமனம் ஆகும் வரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு சிறிய காட்டை அடைந்தேன். அங்கு நரிகளும் பறவைகளும் காணப்பட்டன. பின்பு, குதிரையின் மீது சவாரி செய்து 'தம்பிரா' மரங்கள் அடர்ந்த காட்டை அடைந்தேன். அப்போது மரத்தில் தொங்கிய கொடியைப் பிடித்துக் கொண்டேன். உடனே குதிரை என்னை விட்டு ஓடி விட்டது'.  நான் களைப்படைந்து மரத்தின் அடியின் தூங்கினேன். அது ஒரு யுகம் போலிருந்தது. குளிரால் பற்கள் கிட்டித்து போயின. இருட்டான இரவு நீண்ட இரவானதாகவும் இருந்தது. 

பொழுது விடிந்ததும் அந்தக் காட்டின் வெகு தூரம் நடந்தேன். நண்பகலில் ஒரு கருமையான் நிறமுடைய மிகவும் அழுக்கடைந்த உடைகளை அணிந்த பெண் உணவுடன் செல்வதைக் கண்டேன். நான் அந்தப் பெண்ணிடம், 'எனக்கு உணவு கொடு. பசித்தவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உணவு கொடுத்தவர்கள் பின்பு செல்வச் செழிப்பில் வாழ்வார்கள். எனக்கு பசி அதிகமாக உள்ளது' என்று வேண்டினேன்.  நான் பலமுறை வேண்டியும் அவள் எனக்கு உணவு தராமல் நடந்தாள். நான் அவளைப் பின் தொடர்ந்து வெகு தூரம் நடந்தேன். பிறகு அவள் கூறினாள்:'நான் கீழ்குடியினைச் சேர்ந்தவள். எனது பெயர் ஹரகேயூரி, அரசனே, என்னோடு நடந்து வந்ததால் மட்டுமே உனக்கு உணவு தர முடியாது' என்று கூறி மேலும் வெகு தூரம் நடந்தாள். நானும் தொடர்ந்து உணவு கிடைக்காதா என்ற ஆவலுடன் நடந்தேன்.

பின்பு அவள் என்னிடம் கூறினாள்: 'நீ எனக்கு கணவனாயிருந்தால் மட்டுமே நான் உனக்கு உணவு கொடுப்பேன். எனது தகப்பனாருக்கு இந்த உணவை எடுத்துச் செல்கிறேன். அவர் அருகாமையிலுள்ள நிலத்தை உழுது கொண்டிருக்கிறார். அவருக்கு உண்டான உணவை உனக்குத் தர எனக்கு உரிமையில்லை. ஆனால், நீ என் கணவனாக ஒப்புக் கொண்டால், ஒரு நல்ல கணவனை உணவளித்துக் காப்பாற்றவேண்டிய கடமை எனக்கு வந்து விடும். அப்போது உனக்கு நான் உணவளிப்பேன்.'

நான் உடனே 'பெண்ணே! நான் உனக்குக் கணவனாகச் சம்மதிக்கிறேன்' என்றேன். நான்  சொன்னதைக் கேட்ட அவளும் 'கணவனாக வரப் போகும் ஒருவனின் உயிர் ஆபத்திலிருக்கும் பொது, தகுதி, ஜாதி, பிறந்த வம்சம் இவற்றையெல்லாம் கவனிக்கக் கூடாது' என்று கூறி இருந்த உணவில் பாதியைக் கொடுத்தாள். நாவல் பழங்களைக் கொடுத்தாள்.' இவ்வாறாக நான் என்னிலும் கீழான குடியில் சென்று உணவுண்டேன். பசியாறி ஓய்வு எடுத்த பின்னர் அவள் என் கையைப் பற்றி தன தந்தையிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தாள்: 'தந்தையே, இவர் தான் என் கணவர். நீங்கள் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று சொன்னாள்'

அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். எப்படி எஜமானரிடம் இருந்து விடுபட்ட வேலையாட்கள் மன மகிழ்வுடன் செல்வார்களோ அது போல நாங்கள் இருவரும் அந்தக் காட்டுப் பகுதியில் உல்லாசமாய்த் திரிந்தோம். பின்பு மாலையில் மிருகங்களின் மாமிசங்களும் பறவைகளும் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.

அந்தப் பெண்ணின் தந்தையாரும் என்னை அன்புடன் மருமகனே என்று கூப்பிட்டார். பின்னர் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கருமையான நிறம் கொண்ட அவளுடன் சேர்ந்து நாயின் மாமிசத்தையும், மதுபானங்களையும் அருந்தினேன். திருவிழாப் போல எங்கள் மணநாளின் முதலிரவைக் கொண்டாடினோம். நானும் அவர்களில் ஒருவனாய் ஆனேன். இது போல ஏழு நாட்கள் கொண்டாட்டத்திலேயே கழிந்தன. இவ்வகையில் மேலும் எட்டு மாதங்கள் கழிந்தன.

அவளும் கருவுற்று ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மூன்று வருடத்தில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மற்றொரு குழந்தையை பெற்றெடுத்தாள். இவ்வாறு அந்தக் காட்டுவாசிப் பெண்ணுடன் பல வருடங்கள் குளிரிலும், வெயிலிலும், வெப்பமான கோடை காலங்களிலும் வாழ்ந்தேன். எனக்கும் வயதாகியது. 

பின்பு ஓர் பஞ்சம் உண்டாகியது. மழையில்லாததால் செடிகளெல்லாம் கருகியது. இறப்பும், மரணமும் எங்கும் கோர தாண்டவம் ஆடியது. புற்களும், செடிகளும் காய்ந்து காட்டில் தீப்பற்றியது. துன்பமும் விதியும் சேர்ந்து வாழ்க்கை மிகவும் கொடியதாகியது. பலர் அப்பகுதியை விட்டு விந்திய மலைப் பகுதிக்குச் சென்றார்கள்.

'நானும் என் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேற்றிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பல காத தூரம் நடந்து ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தோம். வேறு இரு காட்டு வாசி பெண்களுடன் என் மனைவி மரத்தடியில் உறங்கினாள். 'பிரிச்சகா' என்ற என் மகன், தனக்கும் மாமிசமும், இரத்தமும் வேண்டும் என்று  உயிரிழக்கும் நிலையில் வேண்டினான். என் வருத்தம் அதிகமாகி, அந்தத் துன்பத்திலிருந்து விடுபட நான் என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினேன். அப்படியாவது என் மகன், எனது வெந்த உடலை தின்று உயிர் வாழட்டுமே என்று காட்டுத்தீயில் புகுந்தேன். அப்போது என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. கண் விழித்துப் பார்த்தால் இதோ இந்த சிம்மாசனத்தில் உங்களுடன் அமர்ந்திருக்கிறேன். சம்பரிகா என்ற ஜாலவித்தைக்காரனின் மாயாஜாலத்தால், நான் மாயமான சூழ்நிலையில் வாழ்ந்தேன். இது போன்றே ஜீவனின் அறியாமையினால் தான் மக்கள் அவதிப படுகிறார்கள்' இவ்வாறு கூறி முடித்தார் லவணன்.  எல்லாவற்றுக்கும் மூல காரணம் மனமே. (ஆதாரம்: யோகவாசிஷ்டம்)


இராம கீதை என்னும் யோகவாசிஷ்டம் - 2 (வசிஷ்டமுனிவரிடம் ஸ்ரீ ராமர் சொன்னது)

உலகம் மிகவும் மாறும் தன்மை உடையது. 

இப்போது பாலைவனமாகிக் காணப்படுவது,நாளைக்கு கடலின் அடிப்பாகமாகி மழைத்தண்ணீர் நிறைந்திருக்கும். 

இன்று வானளாவிக் காணப்படும் மலை, நாளை அழிந்து குழி போல் காணப்படும். 

அழகான உடையணிந்த இந்த உடலை இறப்புக்குப் பின் துணியின்றி குழியில் தள்ளுவார்கள். 

இன்று நரமாகக் காணப்படும் ஒரு ஊர், நாளை யாருமில்லாத காட்டுப் பகுதியாக மாறும். 

இன்றைய காடு நாளை நகரமாகும். 

இன்றைய தலைவன் நாளை வெறும் சாம்பலாகிறான். 

நிலம் நீராகிறது. நீர்நிலை நிலமாகிறது. 

குழந்தை, இளமை, மனித உடம்பு, சொத்துக்கள் போன்ற யாவையும் மாறும் தன்மை கொண்டவை. 

ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் தன்மை உடையவை. 

நாம் விடும் மூச்சால் நம்முடைய உடம்பு அழிகிறது. இந்த உலக மேடையில் ஆடப்படும் நடனம் போல் மனத்தில் பலவித கற்பனைகள் உண்டாகிறது. பெரிய மனிதர்களின் செயல்கள் நம் மனதில் ஞாபகத்தில் மட்டும் நிற்கின்றன. காரியங்கள் மறைந்து விடுகின்றன. 

பல விஷயங்கள், பொருள்கள், காலத்தால் சீரழிந்து விடும். பல புதிய பொருள்களை இந்த உலகம் உண்டாக்கும். மனிதர்களில் மிருகத்தன்மை உடையவர்களாக பலர் மாறுவர். 

கடவுள்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது. 

சூரியன் தன வெளிச்சத்தால் எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிறார். பகல், இரவு அன்று மாறி மாறி காலத்தால் உண்டாகும் எல்லா மாறுதல்களையும் பார்வையிடுகிறார். 

பிரம்மா, சிவன், விஷ்ணு மற்றும் எல்லா பௌதிகப் பொருள்களும் ஒரு நாள் ஒன்றும் இல்லை என்று  ஆகிவிடும். 

ஸ்வர்க்கம், பூமி, காற்று, ஆகாயம், நதிகள், மலைகள், உலகிலுள்ள யாவையும் மரம் நெருப்பில் எரிவதைப் போல காலத்தால் எரிந்து விடும். 

உறவினர், செல்வம், வேலைக்காரர்கள் ஆகியவற்றால் மரண பயத்தில் உள்ளவர்களுக்கு பயனில்லை. ஒரு நேரத்தில் செல்வத்தில் மிதக்கிறோம். மறு நேரத்தில் வறுமையில் வாடுகிறோம். ஒரு நேரம் உடல் நலமாக இருக்கிறது. மறுநேரம் நோய்வாய்ப்பட்டு கஷ்டப் படுகிறோம். மரண பயம் தோன்றாத வரையில் மனத்தில் எல்லாம் இன்ப மயமாக இருக்கிறது. 

மற்றவர்களின் தீய செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அந்தத் தீய செயல்களால் நாட்டில் உள்ள நல்லவர்களும் பாதிக்கப் படுவார்கள்.

இதனால் நாட்டில் கோழைத்தனம் அதிகரிக்கும். முட்டாள்களுடன் தொடர்பு கொள்ளுதல் எளிதாகும். ஆனால் அறிவாளிகளுடனும், ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுதல் மிகக் கடுமையானதாகும். 

காலப் போக்கில் உலகிலுள்ள எல்லோரும் இறந்து போவார்கள். வாழ்க்கை  முழுவதும் மனைவி, குழந்தைகள், அவர்களுக்காக செல்வம் சேர்ப்பது என்று எண்ணி அதற்காகவே வாழ்ந்து, பின்பு அவைகள் காலத்தால் காணாமல் போக, மனிதர்கள் மனம் கலங்குகிறார்கள். துன்பமும் வேதனையும் படுகிறார்கள்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருபத்தி இரண்டு அவதாரங்கள்.

கடவுளின் அவதாரங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களே. பாகவத புராணத்தின் படி, விஷ்ணுவின் அவதாரங்களாக இருபத்தி இரண்டு அவதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. சனத் குமாரர்கள் (நால்வர்)
2. வராக அவதாரம்.
3. நாரதர்
4. நர நாராயணர்கள்
5. கபில ரிஷி
6. தத்தாத்ரேயர்
7. யக்ன நாராயணர்
8. ரிஷப தேவர்
9. ப்ரிது சக்கரவர்த்தி
10. மத்ஸ்ய அவதாரம்
11. கூர்ம அவதாரம்
12. தன்வந்தரி 
13. மோகினி
14. நரஸிம்ஹ அவதாரம்
15. வாமனர்
16. பரசுராமர்
17. ராமர்
18. வேத வியாசர் 
19. பலராமர்
20. கிருஷ்ணர்
21. புத்தர்
22. கல்கி 

மேற்குறிப்பிட்ட அவதாரங்களை பட்டியலிட்ட பின்னர் பாகவதம் சொல்கிறது,''இவற்றுடன் விஷ்ணு பகவானின் அவதாரங்கள் நிறைவு பெற்று விடவில்லை. எண்ணிலடங்கா அவதாரங்களை ஸ்ரீ விஷ்ணு தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்.'' பகவத் கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ணர், ''எங்கெல்லாம் தர்மத்துக்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்'' என்கிறார்.

நரகாசூர வதம் செய்து அதன் மூலம் ஆணவம் மற்றும் அறியாமை இருளை அகற்றி உலகத்தில் தர்மத்தை சம்ஸ்தாபனம் செய்த ஸ்ரீ கிருஷ்ண பகவானை தீபாவளித் திருநாளான இன்றும் என்றும் போற்றித் துதிப்போம்.
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, October 15, 2009

காலம் (இராம கீதை என்னும் யோகவாசிஷ்டம்)

எப்படி எலி நரம்பைக் கடித்து அறுத்து விடுமோ அது போல் காலம் நம் வாழ்க்கையை அழித்து விடும். மிகப் பெரிய மனிதர்களும் இதற்கு விதி விலக்கல்ல. உலகில் யாவற்றையும் விழுங்குவதால் காலம் மிகப் பெரிய சக்தியாகக் காணப்படுகின்றது. 

எப்படி, வடவாக்னி என்ற நெருப்பு,கடலிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கிறதோ, அப்படி காலத்தால் உலகிலுள்ள யாவையும் விழுங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் மேல் யாராலும் உயிர் வாழ இயலாது. ஆனால் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு காலம் மறுபடியும் அப்படியே இருக்கும். வரம் பெற்ற அரசர்களும் இதற்கு விதி விலக்கல்ல. முக்குணங்களாலும் கட்டுப்பட்ட மிகப் பெரிய தேவர்களும் அதற்கு இரையாகிறார்கள். காலம் சுழன்று கொண்டே இருக்கிறது. மகா கல்ப காலத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, காலம் மீண்டும் எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறது. 

காலையில் மரங்களை உண்டாக்கி, மதியத்தில் பூ, காய், கனிகளை உண்டுபண்ணி, இரவில் அவற்றை காலம் அழித்து விடுகிறது. ஒரு நிமிடத்தில் பேரழிவு, மறுநிமிடத்தில் ஒரு நல்ல காலம், ஓரிடத்தில் பிறப்பு, மற்றோரிடத்தில் மரணம் என்று ஒரே நேரத்தில் என்னென்ன நடக்கின்றன? 

குறைந்த அறிவுடையவர்கள் தேவையற்ற பேச்சு, எதையும் நம்பாமை, மதங்களிடையே சண்டை போன்றவற்றில் ஈடுபட்டு தானாக சவக் குழியில் வீழ்கிறார்கள்.

உலகில் மற்றுமின்றி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் யாவும் காலத்தால் விழுங்கப்படுகின்ற காரணத்தால், காலம் பிரபஞ்சத்தின் ஆன்மா என்று கூறப்படுகின்றது. 

காலம் ஒரு சுழல் நீர் போன்றது. மனிதர்களை ஆசையாலும், தீயபழக்கத்தினாலும் பாழும் குழியில் தள்ளி விடுகின்றது. காலமே எல்லாப் பேராசைகளுக்கும், வெறுப்புகளுக்கும், துன்பங்களுக்கும், நம்முடைய ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். எப்படி சிறுவர்கள் பந்தை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களோ, அது போல காலம், சூரியனையும், சந்திரனையும் வைத்துக் கொண்டு விளையாடுகிறது. 

கற்பகால முடிவில் இறந்தவர்களின் எலும்பை மாலையாகப் போட்டுக் கொண்டு காலம் நடனமாடும். கடைசியில் பிரளயாக்னியை உண்டு பண்ணி உலகை ஒன்றுமில்லா ஆகாயத்தில் கரையச் செய்யும். அப்பொழுது பிரமன், இந்திரன் என்று யாரும் இருக்க மாட்டார்கள். 

பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை. 

(ஆதாரம்: இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - முதல் காண்டம் - வைராக்கியப் பிரகரணம். இராமர் தனது 15-ம் வயதில் வசிஷ்ட முனிவரிடம் பல கேள்விகளை கேட்கிறார். அவைகளில் "காலம்" பற்றி இராமர் கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக தான் காலத்தினை பற்றி அறிந்து கொண்டதை விளக்குகிறார். அவற்றின் ஒரு பகுதியே மேலே நீங்கள் படித்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இராமரின் கூற்றான ''பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை'' என்ற கருத்து, அல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Relativity Theory of Time and Space" உடன் ஒத்துப் போவதைக் காணலாம்) . 

Sunday, October 11, 2009

Further information on Shyamantakamani

Glorious History of Koh-I-NoorBy N. P. Sen. Published by New Book Society of India, Post Box No. 250, New Delhi. Price: 15.
     This is a biography of the most brilliant and most precious heritage of India, viz., the Kohinoor, which has been rightly called, ‘the king of diamonds’ and ‘the diamond of kings’.
      The author traces the origin of the Kohinoor to the dawn of Indian history before the times of the Mahabharata. He seems to identify it with the legendary “Shyamanthaka Mani” to which references are made in the Vishnu Purana and the Bhagavata. The author then traces the history of this diamond, through the puraniclegends, and seems to suggest that this was given by Lord Krishna to the Sun-God, who gave it to Karna, the legendary hero of the Mahabharata, from whom it passed on to Arjuna, who presented it to his brother Yudhishtira. The author suggests that this diamond then adorned the crowns of various kings and successors of the Pandavas through Parikshit, the grandson of Arjuna. From this lineage, the diamond passed on to Raja Samvardhana, who is believed to be one of Ashoka’sgrandsons and then it was with the Hindu kings. Even during the invasion of India by MohdGhori, this diamond was preserved, and was smuggled to Malwa where the Parmar dynasty was in power. The last Hindu king who possessed it was Raja Ramdev.The author then proceeds to state that there is no information as to how this diamond passed on to the Sultans of Delhi. Nearly two centuries ago Nadir Shah from Persia invaded India, in search of power and plenty, and took possession of the diamond from the kings of Delhi. Later Shah Shuja, the king of Afghanistan managed to get it, but had to surrender it to Maharaja Ranjit Singh. Prince Daleep Singh, his successor was forced to hand over this to the British at the treaty of Lahore signed in 1849. This was presented to Queen Victoria in 1850 and since then, this great diamond of India is in the hands of the British Royalty.
       The purport in writing the book seems to be a very patriotic one viz., that the Kohinoor which is a great national asset of our country, should be returned back to us.
        In the absence of any other corroborating evidence, historical research workers may find it difficult, at the present stage of our knowledge, to accept as historically correct, the equation of this diamond with the legendary puranik “Shyamanthaka Mani” and its further course as described by the author in this book.
–DR. N. RAMESAN