அன்று சொன்னது, அர்த்தம் உள்ளது.
"சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்தம் என்ற ஐந்து ஞாநேந்திரியங்களால் போகம் உணடாகக் கூடும்.
"சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்தம் என்ற ஐந்து ஞாநேந்திரியங்களால் போகம் உணடாகக் கூடும்.
வேடன் எழுப்பும் ஒரு வித ஓசையை (சப்த) கேட்டு மூச்சடக்கி மான் வேடனுக்கு வசப்படுகிறது.
ஸ்பர்ச சுகத்தை நாடி, காட்டுயானை பழகிய பெண் யானையின் மூலமாக மனிதர்களிடம் பிடிபடுகிறது.
விளக்கின் பிரகாசத்தில் (ரூப) வசப்பட்டு விட்டில்பூச்சி மடிகிறது.
சுவைக்கு(ரச) அடிமையாகி மீன் தூண்டிலில் அகப்பட்டு மாய்கிறது.
மணத்தை (கந்த) நாடி மயங்கி வண்டு மலரில் சிக்கிக் கொண்டு இறக்கிறது.
இப்படி ஒரு இந்திரியத்தின் போக அனுபவத்தாலேயே பிராணிகள் உயிரைத் துறக்கின்றன என்றால், ஒரே சமயத்தில் ஐந்து இந்திரிய போகங்களையும் அனுபவிக்க ஆசைப்படும் மனிதனின் கதி என்னவாகும்?
- ஆதி சங்கரர் (விவேக சூடாமணி)