வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சார்ந்ததே பசு. அப்படியிருந்தாலும் அது "அம்மா" என்று அடி வயிற்றிலிருந்து வாய் விட்டுக் குரல் கொடுக்கிறது. "அம்மா" என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது.
அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பது தான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரiக்ஷ தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
ரொம்பவும் வயதான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் இருக்கிறது. நம்முடைய ஆயுளின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடை யஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து "கோமாதா" என்றே சொல்வது.
"கோ" என்றால் "பசு" என்று எல்லோருக்கும் தெரியும்.
அந்த "கோ"வை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்று தொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.
அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.
பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில் தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்
(நன்றி: வெப்துனியா )
என் குறிப்பு:
என்றும் வயதான பசுக்களை பாதுகாக்கும் இறைபணியில் சென்னை-77, திருவேற்காட்டில் 'பசு மடம்' ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் நான் நேரில் சென்று பசுக்களுக்கு ஒரு பிடி புல்லும், வைக்கோலும் ஊட்டினேன். என்னால் இயன்ற பொருளுதவியும் செய்தேன். மிகச் சிறப்பாக வயதான பசுக்களை பராமரிக்கிறார்கள். பசுக்கள், கன்றுக்குட்டிகள் நடுவே சென்ற பொது அவைகள் 'அம்மா' என்று வாஞ்சையுடன் குரல் கொடுத்தபோது எனக்கு அழுகையே வந்து விட்டது. நம்பிக்கை குழு அன்பர்கள் பசு மடம் செய்து வரும் சேவைக்கு ஆதரவு தரவிரும்பினால் தரலாம்.