Sunday, October 18, 2009

படைத்தவன் மடியில்...

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார்.
அப்போது ஒரு விஞ்ஞானி வந்து, "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை,ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் எங்களுக்கு கற்றுத் தந்து  விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்த படைப்புத் தொழிலை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.
"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.
"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.
அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம். உடனே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.
அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ தயாரித்த உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.
(இணையத்தில் இரசித்த நல்ல நகைச்சுவை)

2 comments:

பித்தனின் வாக்கு said...

இம்ம் கதை நல்லாயிருக்கு. சில அமிலங்ககளை(அமினோ ஆசிட், போலிக் ஆசிட் ) மூலக்கூறுகளை சரியாக ஒன்று இணைத்தால் கரு உருவாக சாத்தியம் உள்ளது என்று கூறும் விஞ்னானிகள் கூட ஒரு செல் தானக பிரிந்து இரண்டு நாலு என்று மல்டிப்பிள் ஆக வளர்வதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுபோல மரணத்தையும் தடுக்க முடியவில்லை. அதுவரை இதுபோல கதைகள் எல்லாம் சாத்தியமே. நன்றி.

Ashwinji said...

வணக்கம்
பித்தன் அய்யா
உங்கள் கருத்து சரியே.
நன்றி

அன்புடன்
அஷ்வின் ஜி