கடவுளின் அவதாரங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களே. பாகவத புராணத்தின் படி, விஷ்ணுவின் அவதாரங்களாக இருபத்தி இரண்டு அவதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. சனத் குமாரர்கள் (நால்வர்)
2. வராக அவதாரம்.
3. நாரதர்
4. நர நாராயணர்கள்
5. கபில ரிஷி
6. தத்தாத்ரேயர்
7. யக்ன நாராயணர்
8. ரிஷப தேவர்
9. ப்ரிது சக்கரவர்த்தி
10. மத்ஸ்ய அவதாரம்
11. கூர்ம அவதாரம்
12. தன்வந்தரி
13. மோகினி
14. நரஸிம்ஹ அவதாரம்
15. வாமனர்
16. பரசுராமர்
17. ராமர்
18. வேத வியாசர்
19. பலராமர்
20. கிருஷ்ணர்
21. புத்தர்
22. கல்கி
மேற்குறிப்பிட்ட அவதாரங்களை பட்டியலிட்ட பின்னர் பாகவதம் சொல்கிறது,''இவற்றுடன் விஷ்ணு பகவானின் அவதாரங்கள் நிறைவு பெற்று விடவில்லை. எண்ணிலடங்கா அவதாரங்களை ஸ்ரீ விஷ்ணு தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்.'' பகவத் கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ணர், ''எங்கெல்லாம் தர்மத்துக்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்'' என்கிறார்.
நரகாசூர வதம் செய்து அதன் மூலம் ஆணவம் மற்றும் அறியாமை இருளை அகற்றி உலகத்தில் தர்மத்தை சம்ஸ்தாபனம் செய்த ஸ்ரீ கிருஷ்ண பகவானை தீபாவளித் திருநாளான இன்றும் என்றும் போற்றித் துதிப்போம்.
No comments:
Post a Comment