காது அதைக் கேட்டது. கூர்மையான கவனத்துடன் சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் காது சொன்னது: ''எங்கே இருக்கு மலை? என்னால் அதைக் கேட்க முடியலயே!''
மலையை அறிந்து கொள்ளவும், தொடவும் நானும் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோசனமும் இல்லையே. மலையை என்னால் தொட முடியலே'' - சொன்னது உள்ளங்கை.
''மலையே இல்லே! என்னாலே வாசனையை உணரவே முடியல..'' -மூக்கு தன் நிலையைச் சொன்னது.
அப்போது கண்கள் மறு பக்கமாகத் திரும்பி அழகை ரசிக்க ஆரம்பித்தன. எல்லோரும் சேர்ந்து கண்களின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பலவாறு விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.
கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்: ''கண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை.''
(கலீல் கிப்ரானின் குட்டிக் கதை)