அதிலிருந்து நூறெண்ணம்!!
நூறெண்ணம்! ஆதாரமாய்
ஓர் எண்ணம் !! அலையில்லாத கடலா? நிலையில்லாத மனமா? தொடர்ந்த பழக்கங்கள்,
குணத்தை உருவாக்கும்.
தொடர்ந்த பழக்கங்களால்
குணத்தை மாற்றியமைக்கவும் முடியும். உங்கள் அன்பை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள் - அது மனதைத் தூய்மையாக்கும். உண்மையான நம்பிக்கை. அது கண்ணாடிச் சட்டத்தில் சிறைப் படுத்தப்பட்ட படமல்ல. திசை தொறும் கிளை விரித்து செழித்தோங்கும் மரமே நம்பிக்கை. நம்பிக்கை, நிரூபணத்தை எதிர் பார்ப்பதில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுகிறது. தீ! அழகானது தான், ஆனால் தீண்டிவிடின் துன்பம் தான். ஒரு விதைக்கும் ஒடுங்கிக்கிடக்கிறது ஆலமரம்.
அத்தனை ஒலிகளுக்கும்
மூலாதாரமாய் இருப்பது ஓம்காரம். அனுபவங்களில் அமைதி உண்டு.
அந்த அனுபவங்களை நினைத்துப் பார்ப்பதன்
மூலமும் அமைதி உண்டு. (நன்றி: பி.எஸ்.ஆச்சார்யாவின் பதஞ்சலி யோக சூத்ரம் எளிய தமிழ் விளக்கம் - நர்மதா வெளியீடு)
4 comments:
ashwin, dont cut and paste tscii pages.
stick to unicode
வணக்கம் திவாஜி
வலைப்பக்கம் வந்தமைக்கு மனமார்ந்த நன்றி.உங்கள் அறிவுரையை சிரமேல் ஏற்கிறேன்.உண்மையில் வலைப்பதிவுக்கு நான் புதியவன் (அமெச்சூர்)! திருத்திய பதிப்பினை நீங்கள் விரைவில் காணலாம். உங்கள் அன்பு அறிவுரைகளை மேலும் எதிர் பார்க்கிறேன்.
அடிக்கடி வருக.
அஷ்வின் ஜி
திவாஜி
ஒருமாதிரியாக சரிசெய்து விட்டேன் என்று
நினைக்கிறேன். நன்றி.
அஷ்வின் ஜி
திவாஜி
ஒருமாதிரியாக சரிசெய்து விட்டேன் என்று
நினைக்கிறேன். நன்றி.
அஷ்வின் ஜி
Post a Comment