'தண்ணீரில் வாழும் மீனுக்குத்
தாகம் என்றால் எனக்குச்
சிரிப்புதான் வருகிறது.
உன் வசிப்பிடத்திலேயே
மெய்ப்பொருளிருக்க நீயேன்
வனங்கள் தோறும் தேடிச் செல்கிறாய்?
மெய்ம்மை இங்கே இருக்கிறது.
காசியோ மதுராபுரியோ
நீ எங்கு வேண்டுமானாலும் செல்.
உன்னுள் இறைவனைக்
காணும் வரை - இந்த
ஒட்டு மொத்த உலகம்
அர்த்தமற்றது தான் உனக்கு'.
No comments:
Post a Comment