வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் -
பாகம் ஒன்று மற்றும், பாகம் இரண்டின் முந்தைய பகுதிகளைப் படிக்க :
பாகம் இரண்டு.
அமர்நாத் புனித யாத்திரை.
பகுதி 12 :-
6. அமரநாதம் - தொடரும் புனித பாரம்பரியம் -சுவாமி விவேகானந்தரின் அமர்நாத் புனிதப் பயண அனுபவங்கள் - சகோதரி நிவேதிதா எழுதுகிறார்.
சுவாமி விவேகானந்தர் தம் சீடர்களுடன் அமர்நாத் குகைக்கு சென்று அமரநாதரைத் தரிசித்ததாக சகோதரி நிவேதிதா குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்புகளின் படி 1898 ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் அமர்நாத் குகைக்கு பெஹல்காம் வழியாக ஜூலை 29 தேதி அன்று நடைப் பயணமாக புறப்பட்டு பனிலிங்க வடிவில் உள்ள அமரநாதரை ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று தரிசனம் செய்ததை வரலாற்றுப் பூர்வமாக பதிவு செய்கிறார். (சகோதரி நிவேதிதாவும் அவருடன் அமர்நாத் சென்றிருக்கிறார்). மேலும் நிவேதிதா சொல்கிறார். (தமிழில் மொழி பெயர்க்கும் வல்லமை இல்லாததாலும், பகிரப்படும் அனுபவங்களின் மூலம் சிதைந்து விடக் கூடாது என்பதாலும் சகோதரி நிவேதிதா எழுதிய அவரது ஆங்கில மூலத்தையே இங்கே இட்டுள்ளேன்).
ஆதாரம்:
(Sister Niveditha)
The Complete Works of Swami Vivekananda/Volume 9/Excerpts from Sister
Nivedita's Book/X The Shrine Of Amarnath*
CHAPTER X
THE SHRINE OF AMARNATH
PLACE: Kashmir
TIME: July 29 to August 8, 1898
.
On Thursday we reached Pahalgam and camped down at the lower end of the valley. We found that the Swami had to encounter high opposition over the question of our admission at all. He was supported by the Naked Swamis, one of whom said, "It is true you have this strength, Swamiji, but you ought not to manifest it!" He yielded at the word. That afternoon, however, he took his daughter round the camp to be blessed, which really meant to distribute alms — and whether because he was looked upon as rich or because he was recognized as strong, the next day our tents were moved up to a lovely knoll at the head of the camp. . . .
JULY 30.
How beautiful was the route to the next halt, Chandanwari! There we camped on the edge of a ravine. It rained all afternoon, and I was visited by the Swami only for a five-minutes' chat. But I received endless touching little kindnesses from the servants and other pilgrims. . . .
Close to Chandanwari the Swami insisted on my doing my first glacier on foot and took care to point out every detail of interest. A tremendous climb of some thousands of feet was the next experience. Then a long walk along a narrow path that twisted round mountain after mountain, and finally another steep climb. At the top of the first mountain, the ground was simply carpeted with edelweiss. Then the road passed five hundred feet above Sheshnag with its sulky water, and at last we camped in a cold damp place amongst the snow-peaks, 18,000 feet high. The firs were far below, and all afternoon and evening the coolies had to forage for juniper in all directions. The Tahsildar's, Swami's and my own tents were all close together, and in the evening a large fire was lighted in front. But it did not burn well, and many feet below lay the glacier. I did not see the Swami after we camped.
Panchatarani — the place of the five streams — was not nearly such a long march. Moreover, it was lower than Sheshnag, and the cold was dry and exhilarating. In front of the camp was a dry riverbed, all gravel, and through this ran five streams, in all of which it was the duty of the pilgrim to bathe, walking from one to the other in wet garments. Contriving to elude observation completely, Swamiji nevertheless fulfilled the law to the last letter in this respect. . . .
At these heights we often found ourselves in great circles of snow-peaks, those mute giants that have suggested to the Hindu mind the idea of the ash-encovered God.
AUGUST 2.
On Tuesday, August the 2nd, the great day of Amarnath, the first batch of pilgrims must have left the camp at two! We left by the light of the full moon. The sun rose as we went down the narrow valley. It was not too safe at this part of the journey. But when we left our Dandies and began to climb, the real danger began. . . .
Then, having at last reached the bottom of the farther slope, we had to toil along the glacier mile after mile to the cave.. .
The Swami, exhausted, had by this time fallen behind. . . . He came at last and with a word sent me on; he was going to bathe. Half an hour later he entered the cave. With a smile he knelt first at one end of the semi-circle, then at the other. The place was vast, large enough to hold a cathedral; and the great ice-Shiva, in a niche of deepest shadow, seemed as if throned on its own base. A few minutes passed, and then he turned to leave the cave.
To him, the heavens had opened. He had touched the feet of Shiva. He had had to hold himself tight, he said afterwards, lest he "should swoon away". But so great was his physical exhaustion that a doctor said afterwards that his heart ought to have stopped beating, but had undergone a permanent enlargement instead. How strangely near fulfilment had been those words of his Master, "When he realizes who and what he is, he will give up this body!"
"I have enjoyed it so much!" he said half an hour afterwards, as he sat on a rock above the stream-side, eating lunch with the kind Naked Swami and me.
"I thought the ice Linga was Shiva Himself. And there were no thievish Brahmins, no trade, nothing wrong. It was all worship. I never enjoyed any religious place so much!"
Afterwards he would often tell of the overwhelming vision that had seemed to draw him almost into its vertex. He would talk of the poetry of the white ice-pillar; and it was he who suggested that the first discovery of the place had been by a party of shepherds, who had wandered far in search of their flocks one summer day and had entered the cave to find themselves before the unmelting ice, in the presence of the Lord Himself.
He always said too that the grace of Amarnath had been granted to him there, not to die till he himself should give consent. And to me he said, "You do not now understand. But you have made the pilgrimage, and it will go on working. Causes must bring their effects. You will understand better afterwards. The effects will come".
How beautiful was the road by which we returned next morning to Pahalgam! We struck tents that night immediately on our return to them and camped later for the night in a snowy pass a whole stage further on. We paid a coolie a few annas here to push on with a letter; but when we actually arrived next afternoon we found that this had been quite unnecessary, for all morning long relays of pilgrims had been passing the tents and dropping in, in the most friendly manner, to give the others news of us and our impending arrival. In the morning we were up and on the way long before dawn. As the sun rose before us, while the moon went down behind, we passed above the Lake of Death, into which about forty pilgrims had been buried one year by an avalanche which their hymns had started. After this we came to the tiny goat-path down the face of a steep cliff by which we were able to shorten the return journey so much. This was little better than a scramble, and everyone had perforce to do it on foot. At the bottom the villagers had something like breakfast ready. Fires were burning, Chapatties baking, and tea was ready to be served out. From this time on parties of pilgrims would leave the main body at each parting of the ways, and the feeling of solidarity that had grown up amongst us all throughout the journey became gradually less and less.
That evening on the knoll above Pahalgam, where a great fire of pine-logs was lighted and Dhurries spread, we all sat and talked. Our friend the Naked Swami joined us and we had plenty of fun and nonsense, but presently, when all had gone save our own little party, we sat on with the great moon overhead and the towering snows and rushing rivers and the mountain-pines. And the Swami talked of Shiva and the cave and the great verge of vision.
AUGUST 8.
We started for Islamabad next day, and on Monday morning as we sat at breakfast, we were towed safely into Srinagar.
*****
திருக்கயிலாய யாத்திரை செல்லுபவர்கள் அதற்கு முன்னதாக அமர்நாத் புனிதயாத்திரையை செய்வதன் மூலம் திருக்கயிலாய யாத்திரையின் போது ஏற்படும் சிரமங்களை வெகுவாகக் குறைத்துக் கொள்ளமுடியும் என்றும் பலர் நம்புகிறார்கள்அமர்நாத்துக்கு போகாமலேயே நேரடியாக திருக்கயிலாய புனித யாத்திரையை மேற்கொண்டோர் நிறையப் பேர் (நான் படித்தறிந்த வகையில் தாய்த் தமிழில் எழுதியுள்ள கீதாஜி, சிங்கை கிருஷ்ணன், சுவாமி சித்பவானந்தா, அருசோ, சுவாமி கமலாத்மானந்தா போன்ற பெரியோர்கள்) இருக்கிறார்கள்.
எனினும் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கிற ஒரு சிவஸ்தலத்தை அதுவும் பனிலிங்க வடிவில் அருள் பாலிக்கும் சிவனை தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு அமர்நாத் புனித யாத்திரையில் கிடைக்கிறது.
இந்தப் புனிதப் பாரம்பர்யம் தொடர இறையடியார்களின் பங்களிப்பும் தேவை. இறைத் தேடல் என்று துவங்கியபின் அது அகமுகப் பயணமோ அல்லது புறவயப் பயணமோ எதுவாகினும் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை. சிவனருளால் அவை ஜன்மஜன்மத்துக்கும் தொடரும்.
இந்த அனுபவப் பதிவுகளை நிறைவு செய்யு முன்பு சில விஷயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பிறந்திறந்து எத்தனைப் பிறவிகள் இளைத்தேனோ, தெரியவில்லை. அதில் மனிதப் பிறவி இருந்திருக்குமா அதுவும் தெரியவில்லை. அந்தப் பிறவிகளில் நல்லவனாய் இருந்தேனோ அதுவும் தெரியாது. இறையவைனை வணங்கியிருப்பேனோ, இறையடியார்களையாவது வணங்கி இருப்பேனோ அதுவும் தெரியாது.
ஆனால் இப்பிறவியில் மனிதப் பிறவியில் பிறந்திருப்பது நிதர்சனம். உண்மையான உண்மை. இரை தேடுவது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான உணர்வு. இறை தேடும் மாண்பு மனிதப் பிறவிக்கே இயல்பானது. அந்த உணர்வுடன் என்னைப் படைத்த என் முதல் பெற்றோரான சிவ-பார்வதிக்கும், இந்தப் பூமிப் பந்தில் என்னை பெற்று வளர்த்தபோது இரையை ஊட்டும் போதே, எனக்குள்ளே இறையுணர்வையும் ஊட்டி வளர்த்த என் பெற்றோருக்கும், சிறுவயதில் இருந்தே என் போன்றே மனப்பாங்கு கொண்ட தோழர்களை எனது நண்பர்களாக ஆக்கிய இறைவல்லமைக்கும், அந்த நண்பர்களுக்கும், முன்பின் தெரியாத இடங்களிலும் கூட, ஒரு சிவனடியாரின் தொடர்பு கிடைத்துவிடும் அற்புதப் பேறு தந்திருக்கும் என் அம்மையப்பனுக்கும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தற்செயலாக குழுமம் என்றால் என்ன என்றறிய கூகிலாரை உசாவிய போது தந்த பட்டியலில் நம்பிக்கை குழுமம் என்ற பெயர் மட்டுமே என் கருத்தை கவரும்படி வைத்ததும், இறையருளே.
நம்பிக்கைக் குழுமத்தில் உறுப்பினராக அனுமதி வேண்டும் என்று மடலிட்ட ஓரிரு நாட்களில் திரு.ராமா என்னுடன் தொலைபேசி மூடல் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி எனது ஆன்மீக ஆர்வத்தை பரிசோதனை செய்த பின்னர் அனுமதித்ததும், குழுமத்தின் உள்ளே நுழைந்த பின்னர் கிடைத்த அற்புதமான ஆன்மிகம் தொடர்பான செய்திகளும், ஆன்மீகப் பெரியார்களுடன் மின்மடலில் உரையாடும் அனுபவங்களும், காழியூரன் போன்ற நேரடி இறைத்தரிசன அனுபவங்களைப் பெற்ற பெரியோர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு பெற்றதும் என்று எதைச் சொல்லுவது? எப்படி சொல்லுவது?
இவை எல்லாவற்றிற்கும் காரணமாய் விளங்கும் ஆதிசிவனின் தாளிணை பற்றிப் பணிந்து வணங்குகிறேன். ஜூலை மூன்றாம் தேதி (2010) சென்னையில் இருந்து அமர்நாத் புனித யாத்திரைக்கு புறப்படும் நாள். அன்று முதல் நம்பிக்கைக் குழுமம் செயல்படாமல் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பைப் படித்துவிட்டு அதிர்ந்து போய் அமரநாதனிடம் மானசீகமாக முறையிட்டு விட்டு ஜூலை பதினெட்டாம் தேதி அன்று காலை இல்லம் திரும்பியதுமே இணையத்தில் போய்ப் பார்த்த போது நம்பிக்கைக் குழும அன்பர்களை இரத்தினமாலையில் கோர்த்து விட்டதும் இறையருளே..
தெய்வாதீனமாக இரத்தினமாலையில் நான் இணைக்கப்பட்டிருந்ததும் என்னை பொறுத்த வரையில் என் சிவனின் திருவருள் தான்.
இரத்தினமாலை குழுமத்துக்கு எனது நுழைவு மடலாக எழுதிய ''சிவனருள் பொலிக'' என்னும் இழையிலேயே யாத்திரை அனுபவத்தினை தொடர்ந்து எழுதலாம் என குழும உரிமையாளர் டாக்டர் சங்கர்ஜி (USA) கூறியதை இறைவனது கட்டளையாகக் கொண்டு துவங்கி, இறையடியார்களில் ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஊக்கங்களுடன் தட்டுத் தடுமாறி (எனினும் தடம் மாறாமல்) அம்பிகையையும், அப்பனையும் தரிசித்த அனுபவங்களை எனக்கு தெரிந்த வகையில் உங்களுக்குப் படைத்து இருக்கிறேன். இத்தனை நீண்ட இடுகையை எழுதுவது இதுவே முதல் முறை. இதற்கும் இறையருளும், இறையடியார்களின் ஆசிகளும் துணை நின்றன.
காரணமாய், காரியமாய், மெய்ப்பொருளாய், பணிவோருக்கு அறிவும் ஆனந்தமும் தரும் பொருளாய் விளங்கும் என் சிவனை மீண்டும் பணிந்து வணங்கி ஸ்ரீ மணிவாசகரின் ''திருச்சதகம்'' பகுதியில் இருந்து கீழ்க்கண்ட பாடலை இட்டு நிறைவு செய்கிறேன்.
வான நாடரும் அறியொ ணாதநீ
மறைகள் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி யான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத் துடைய விச்சையே.
(மணிவாசகர் - திருவாசகம்-திருச்சதகம்)
சிவனருள் பொலிக.
சிவார்ப்பணம்.
குறிப்பு: என்னுடன் யாத்திரையில் கலந்து கொண்ட அன்பர்கள் அவர்களது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள இசைந்திருக்கிறார்கள். அடுத்ததாக சோட்டா அமர்நாத் பற்றிய ஒரு குறிப்பு பதிவாக இருக்கிறது. இந்தப் பதிவினைத் தொடர்ந்து எனது சஹ யாத்திரிகளின் யாத்திரை அனுபவங்களை ஒன்றன் பின் ஒன்றாக காணலாம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் அன்பர்கள் இந்தப் பதிவுகளை விரும்பிப் படித்து வருகிறார்கள். முகம் தெரியாத அவர்களின் இதயத் துடிப்புகளை நான் உணருகிறேன். அவர்களுக்கெல்லாம் இறைவனின் இன்னருள் நிறைந்து விளங்கிட, அவர்கள் உள்ளங்களும், இல்லங்களும் மகிழ்வும், அமைதியும், நலமும், வளமும் பெற்று விளங்க எல்லாம் வல்ல பரமனை வேண்டிப் பணிகிறேன். வருகிற இரண்டாயிரத்து பதினொன்றும், தொடர்ந்து வரும் எல்லா ஆண்டுகளும் வளமாய், நலமாய் அமைய வாழ்த்துக்கள்.
தங்கள் அன்பில் சிவத்தையும், ஆசிகளில் சக்தியையும் தரிசிக்கும்:-
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
வேதாந்த வைபவம்: www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ: www.frutarians.blogspot.com
email:- ashvinjee@gmail.com