Thursday, December 30, 2010

அமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.

அமர்நாத் நினைவலைகள்.

கடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தளங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.



அறிவிப்பு:
கீழ் வரும் பதிவினைத் தொடர்ந்து பின்னர் என்னுடன் யாத்திரை வந்த நண்பர்களின் அனுபவக் கட்டுரைகள் வெளியாகவிருக்கின்றன.

சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.
(இணைய வெளியில் படித்ததில் இருந்து இந்தச் செய்தியை வெளியிடுகிறேன்.  இந்தத் புனிதஸ்தலம் இருக்குமிடம் பாகிஸ்தான் எல்லையோர பகுதி என்பதினால் வெளி மாநில யாத்திரிகள் இங்கு பயணம் செல்ல தற்சமயம் அனுமதி கிடையாது)

காஷ்மீரில் மண்டி என்னும் கிராமம் பூஞ்ச் நகரிலிருந்து சுமார் பதினாறு மைல் தூரத்தில் இருக்கிறது. மண்டியில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்புராமண்டி என்னும் ஊரில் அதன் அருகில் பாய்ந்தோடும் புல்சதா என்னும் சிற்றாற்றின் கிளை ஆறான லோரான் என்று அழைக்கப்படும் மற்றொரு சிற்றாற்றங்கரையில் புத்தா அமர்நாத் என்னும் சின்னஞ்சிறு கோயில் இருக்கிறது.

இப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிற அமர்நாத் பனி லிங்கத்தை விட இந்த ஸ்தலம் பழமை வாய்ந்தது என்பதால் தான் இதற்கு புத்தா அமர்நாத் என்று பெயர் வழங்குகிறது. புத்தா என்றால் வயதான, மூத்த என்று பொருள். இந்த புத்தா அமர்நாத்தின் மூல விக்கிரகம் சுமார் நாலு அடி உயரமுள்ள வெள்ளை சலவைக்கல் மலை  தான். அந்த மலைக்குத் தான் அபிஷேகம், ஆராதனைகள் எல்லாம் நடக்கின்றன..

இராவணனின் தாத்தா புல்சத்த மகரிஷி இந்த நதிக் கரையில் தவம் இருந்ததாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. புகழ் பெற்ற இந்த புத்த அமர்நாத் கோவிலை கட்டியவர், மோதி மகாராஜா என்னும் இந்து சமயத்தை சார்ந்த மன்னர்.

இப்போது இந்த ஊரில் ஒரு இந்து கூட இல்லை என்பது வினோதமான செய்தி. இந்த கோவில் கட்டப் பட்ட சமயத்தில் இந்த ஊரில் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம். இப்போது இருப்பவர்கள் எல்லாம் நான்கு தலைமுறைக்கு முன்னர் இந்துக்களாக இருந்தவர்கள்தாம். ரக்ஷா பந்தன் தினத்தன்று பெருவாரியான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து பரமனின் அருளை வேண்டிச் செல்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு வெகு அருகாமையில் இந்த இடம் இருப்பதினால் நம்மை போன்ற வெளிமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்படுகிறது.

முன்பெல்லாம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் இந்தக் கோவிலுக்கு வருவதுண்டு என்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். 

4 comments:

Senthil Murugan said...

அய்யா,

தங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............

தற்போதே ஒருமுறை அமரனதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......

தங்கள் எழுத்துக்கான சக்தி............
தாங்கள் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....

மிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......

நன்றி.....

Senthil Murugan said...

அய்யா,

தங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............

தற்போதே ஒருமுறை அமரனதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......

தங்கள் எழுத்துக்கான சக்தி............
தாங்கள் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....

மிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......

நன்றி.....

Senthil Murugan said...

ஒம் நமசிவாய.....

அய்யா,

தங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............

உள்ளது உள்ளபடி எழுதியுள்ளீர்கள்.........(பால்டலில் அமர்நாத்ஜி குகைக்கு செல்லவேண்டாம் என்று முதல்நாள் முடிவு செய்ததாக எழுடியுள்ளீர்களே........)

நகைச்சுவை (குதிரைக்கும் தங்களுக்கும்-ஆனா மௌன உரையாடல்......), எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மகிழ்ச்சி, ஆனந்தம், பேரானந்தம், வலி, கருணை, கற்பனை, அனைத்து உணர்வுகளும் அருளும் அற்புத திருத்தலமாம் அமர்நாத்ஜி தரிசன பயன அனுபவங்களை அப்படியே உணர்ந்தோம்......

கோவிந்தா மனோகர்-அய்யா அவர்களின் அனுபவங்களும் அருமை...

(அவரின் சமவெளி தத்துவம் அருமை.....)

தற்போதே ஒருமுறை அமரனாதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......

தங்கள் எழுத்துக்கான சக்தி............
தங்களின் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....

மிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......

நன்றி.....

செந்தில்
-----------
தற்போதுதான் தங்களது blogspot -i முழுமையாக பார்க்கும் வாய்ப்பை இறைவன் அருளினார்.....
தங்களது உழவாரப்பணியில் சேர எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அணில் வேலை செய்ய விருப்பம்........
அடுத்த முறை எங்களுக்கு, முடிந்தால் மின் அஞ்சல் செய்தால் நாங்களும் கலந்து கொள்ள முயற்சி செய்வோம்
எனினும் நான் தங்களது blogspot - i favorite page - ஆக வைத்துள்ளேன்.....முடிந்த வரை அடிக்கடி வர முயற்சி செய்கிறேன்...

நன்றி..........

Ashwinji said...

அன்பின் சிவனடியார் செந்தில் சகோதரர்களுக்கு. தங்கள் பின்னூட்டம் சிவத்தேனாய் இனித்தது.

நேரில் சந்தித்ததும், சிறந்த சத்சங்கமாய் திகழ்ந்தது. தங்கள் அன்பு சிவமயமாக இருந்தது.

எல்லாம் சிவனருள்.