Sunday, October 25, 2009

உணர்ச்சிகள் - ஒரு உவமைக்கதை

''இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி, நீல பனிப்படலம் போர்த்தியிருக்கும் மலையை நான் பார்க்கிறேன். மலை எவ்வளவு அழகாக இருக்கிறது?'' -- கண்கள் தன்னை மறந்து சொல்லின.

காது அதைக் கேட்டது. கூர்மையான கவனத்துடன் சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் காது சொன்னது: ''எங்கே இருக்கு மலை? என்னால் அதைக் கேட்க முடியலயே!''

மலையை அறிந்து கொள்ளவும், தொடவும் நானும் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோசனமும் இல்லையே. மலையை என்னால் தொட முடியலே'' - சொன்னது உள்ளங்கை.

''மலையே இல்லே! என்னாலே வாசனையை உணரவே முடியல..'' -மூக்கு தன் நிலையைச் சொன்னது.

அப்போது கண்கள் மறு பக்கமாகத் திரும்பி அழகை ரசிக்க ஆரம்பித்தன. எல்லோரும் சேர்ந்து கண்களின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பலவாறு விமர்சிக்க ஆரம்பித்தார்கள். 

கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்: ''கண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை.''
(கலீல் கிப்ரானின் குட்டிக் கதை)

2 comments:

பித்தனின் வாக்கு said...

நமக்கு தெரியாவிட்டால் நாம் அதை குறை சொல்லுகின்றேம் என்பதுதான் இந்த கதையின் நியதி.
நன்றி.

Ashwinji said...

அன்புள்ள பித்தன் ஐயா,வணக்கம்.
தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி.
சைவ சித்தாந்தத்தில் மும்மலம் என்பார்கள்.மாயா மலம், கன்ம மலம், ஆணவ மலம் ஆகிய இந்த பிறவி அழுக்குகள் காரணமாகவே உண்மைக் காரணங்களை மனிதர்கள் அறிய முடியாமல் போகின்றது என்றும் ஆன்மசாதகர்கள், இந்த துகள்களை அகற்றி உண்மையைக் கண்டு கொள்கிறார்கள் என்றும் மேலோர் கூறுகிறார்கள்.இந்தக் கதை அந்த வேதாந்தக் கருத்தை ஒட்டிய பொருத்தமான உவமைக் கதை என நான் உணர்ந்ததாலேயே இதனை வெளியிட்டேன்.
அன்பு வருகைக்கும், தொடர் ஆதரவுக்கும் இதய நன்றி.