Thursday, October 22, 2009

பீஜாட்சரம் என்றால் என்ன?

பீஜம் என்றால் அடி, ஆரம்பம், நுனி. தோன்றும் இடம். அட்சரம் என்றால் வார்த்தை, சப்தம். உலகில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு சப்தம் இருக்கின்றது. அந்த அசைவின் அடி, அந்த அசைவின் நுனி, அந்த அசைவின் கரு இவைகளிலிருந்து அந்த சப்தம் கிளம்புகிறது. அந்த சப்தத்திற்குதான், அந்த அசைவிற்குதான் பீஜாட்சரம் என்று பெயர். உதாரணமாக ஹ்ருதயம் அசைகிறது. அந்த ஹ்ருதயத்தினுடைய சப்தம் என்ன என்பதை கவனித்திருக்கிறார்கள். "செளஹு" என்ற சப்தம் ஹ்ருதயத்தின் சப்தம். மூளையினுடைய சப்தம் என்ன என்று கவனித்திருக்கிறார்கள். "ரும்" என்பது மூளையின் சப்தம். இதை போல நாடி நரம்புகளுக்கு, நுரையீரல்களுக்கு, வயிற்றுக்கு, தொண்டைக்குழிக்கு, முதுகெலும்பின் அடிப்பகுதிக்கு என்று பல சப்தங்கள் உண்டு. இந்த வெளியுனுடைய சப்தம் "ஓம்". இந்த "அஉம்" என்ற சப்தம் தான் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது. இது எப்பொழுதோ ஏற்பட்ட அசைவினால் தொடர்ந்து கேட்கின்ற சப்தம். ஒரு அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி, அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எப்பொழுது துவங்கியது என்று யோசித்து தடம் பார்த்து போக ஒரு பீஜத்தில், ஒரு கருவில், ஒரு நுனியில் முடியும். அங்கிருந்து தோன்றிய சப்தம் என்பதால் அதற்கு பீஜாட்சரம் என்று பெயர். இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. இதை யோசித்து, யோசித்து, யோசித்து அடி ஆழம் போய் உணர்வதின் மூலம் இதை ஒரு வேளை புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.
நன்றி : http://balakumaranpesukirar.blogspot.com/

2 comments:

பித்தனின் வாக்கு said...

இந்த சப்தம் என்பதைத்தான் அறிவியலார் மின் காந்த தொடர்பு அலைகள் எங்கின்றார்கள். இது உடல் முழுதும் நம் நரம்பு மண்டலம் வழியாக கடத்தப் படுகின்றது. இது குறித்து ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. மேலை நாட்டில் ஒருமுறை ஒரு சத்தம் புகாத அறை ஒன்றை கட்டினார்கள். அதனுள் வெளியுலக சத்தங்கள் எதுவும் புக முடியாது. வெறும் நிஷப்த்தம் மட்டும் இருக்கும். அவர்கள் ஒரு பிரபல எழுத்தாளர் ஒருவரை அதுக்குள் அனுப்பி அவரை ஒரு கட்டுரை எழுத வைக்க நினைத்தார்கள். அவர் உள்ளே சென்று ஒரு மணிணேரம் இருந்து வந்தார். அவர் வந்ததும் யாரிடமும் ஒரு ஜந்து மணித்துளிகள் பேசவில்லை. பின் அவரிடம் அறையப் பற்றிக் கேட்டார்கள். அவர் சொன்னார் உள்ளே ஒரே சத்தம். நான் இன்றுதான் கேட்டேன். எவ்வளவு இரைச்சல்கள் என்று. ஏற்ப்பாட்டார்கள் குழம்பி நிற்க அவர் சொன்னார் புற உலக சத்தங்கள் நிற்க நான் என் உடம்பின் சத்தங்களை முழுமையாக உணர்ந்தேன். எவ்வளவு சத்தங்கள் என்றார். அற்புதமான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.நன்றி.

Ashwinji said...

வணக்கம் பித்தன் ஐயா,
ஒரு அருமையான செய்தியை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு என் இதய நன்றி.