Tuesday, May 15, 2012

கயிலை-மானசரோவரம் புனித யாத்திரை.

திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய.

காவாய் கனகத் திரளே போற்றி;
கயிலை மலையானே போற்றி போற்றி.


அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் எம்பெருமான் சிவனருளால், எதிர்வரும் ஜூன் மாதம் எட்டாம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு கோரக்பூர் வழியாக, காத்மாண்டு(நேபாளம்) சென்று அங்கிருந்து திபெத்(சீனாவில்)தில் உள்ள மானசரோவரம்-திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டு அகில புவனங்களுக்கும், அண்டசராசங்களுக்கும் அதிபதியாக விளங்கும் அம்மையப்பரை தரிசனம் கண்டுவர ஈசன் திருவருள் கூட்டி இருக்கிறது.


முன்னோரின் தவப்பயனாக இப்பிறவியில் இந்த நல்வாய்ப்பினைப் பெற்றிட அடியேன் பல்லாண்டுகள் கனவிலும், நினைவிலும் எண்ணிய  இந்த புனித யாத்திரை நலமாய் ஈடேற அவனருளாலே அவன் தாள் பணிந்து என் இதய நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன்.


அரிதினும் அரிதான இம்மானுடப் பிறவியில் கிடைக்கும் சிவபுண்ணியத்தில் பங்கேற்க விரும்பும் இறையடியார்கள் விரும்பினால் காணிக்கைகளை தந்து சிவனருள் பெற்று மகிழ ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று எண்ணி காணிக்கை அளிக்க விரும்புவோர் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விருப்பத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். காணிக்கை தர இயலாதோர் தங்களது விலைமதிப்பற்ற நல்லாசிகளை நல்கிட வேண்டுகிறேன். 

எங்கள் அணியினர் மேற்கொள்ளும் இந்த புனித யாத்திரை எல்லா வகையிலும் நலமாய் அமைந்திட உங்கள் எல்லோரது பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும், நல்லாசிகளையும் மீண்டும் மீண்டும் வேண்டிப் பணிகிறேன். 

ஓம் நமசிவாய.

அஷ்வின்ஜி
சென்னை(தமிழ்நாடு)
இந்தியா.


இதய நன்றிகள்:


எனது கயிலை யாத்திரை பூரணமாக அமைந்திட மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தந்து வரும் இறையடியார்களுக்கு எனது இதய நன்றிகளை சமர்பிக்கிறேன். சிவம் அவர்களது வாழ்க்கையை எல்லாவிதங்களிலும் செம்மையாக்கிட வேண்டிப் பணிகிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் பெரியவர் யோகாசிரியர் மற்றும் இயற்கை நலவாழ்வியல் நெறியாளர் திருமிகு. காரைக்குடி Er.A.Meiyappan, B.E., MBA, PGDip(Yoga), (சென்னை) அவர்கள் எனது வங்கிக கணக்கில் ஒரு தொகையை காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்.  அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். 


அஷ்வின்ஜி.
19.05.2012

2 comments:

நிகழ்காலத்தில்... said...

இறை கருணை எவ்விதம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்வீர்களாக....

Ashwinji said...

நிகழ்காலத்தில் சிவா...

சிவாவின் வாழ்த்துக்கு என் நன்றி.
தாங்களும் கயிலாயதரிசனம் பெற்றவர் என்ற வகையில், சிவத்திடம் இருந்தே வாழ்த்து பெற்றமை போல உணர்கிறேன். ஓம் நமசிவாய.