Sunday, October 2, 2011

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011திருச்சிற்றம்பலம்.

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011

இடுகை ஒன்று.

ஓம் நமசிவாய.

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 
(திருமந்திரம் - 2623)

fiveheaded_sadashiva_hk43.jpg
பஞ்சமுக சதாசிவர் 
(நன்றி : கூகிள் இமேஜஸ்)

எல்லாம் வல்ல அம்மையப்பனை வணங்கி இந்த ஆண்டு நான் நேபாள யாத்திரை சென்று வந்த அனுபவங்களை பகிர துவங்குகிறேன். 

கடந்த ஆண்டு (2010) நம் பரமர் அமரநாதரையும், அகில புவன அம்பிகை வைஷ்நோதேவியையும் தரிசனம் செய்து வரும் வாய்ப்பு கிடைத்தது. அமர்நாத் சென்று வந்த பின்னரோகொண்டாடும் பக்தர் தம் இதயத்தில் உறையும் ஈசன்பனி உறையும் இமயத்தை தன்னிடமாக கொண்ட நாதன்என் உள்ளத்தில் புகுந்தது மட்டுமின்றி உள்ளத்தை கவர்ந்தும் விட்டார். எனவேதினம் தோறும எண்ணங்கள்செயல் எல்லாம் அவனே நிறைந்து நிற்க ஆரம்பித்துவிட்டான்.

எந்த அருகதையும் இல்லாத எனக்கு சிவம் காட்டி வரும் அன்பும்ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க அரியது என்பதற்கு தின வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளே ஆதாரமாக அமைந்து விட்டது. எங்கேயும் எப்போதும் சத்சங்கமாக அமைய சிவபெருமான் ஆசி கிட்டியது. 

வெளியூர் பயணிக்கும் போதெல்லாம் அடியார் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆகிவிடுவார். அவரது உதவிகள் எனக்கு தேவையானதாகவே இருந்திருக்கும். அலுவல் பணியாக செல்லும் போது கூட நான் சந்திக்க நேரிடும் அன்பர் ஒரு இறையடியாராக இருப்பார். எனது தேவைகளும் தடங்கல் ஏதுமின்றி அவனருளால் இனிதே நிறைவேறிவிடும். 

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே. 
(திருமந்திரம் - 2624)

சிவனருளாலே அமைந்த சிவனடியார்களின் சத்சங்கம் என்னை இந்த ஆண்டு நேபாளம் வரை அழைத்து சென்று உலக ஆன்மாக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் பசுபதிநாதரை தரிசிக்க செய்தது.


 (பகிர்தல் தொடரும்)
-- 
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

அமர்நாத் பயண அனுபவங்களை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்:

4 comments:

Shiva said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம், என எங்களையும் பசுபதினாதரைச் தரிசிக்க அழைத்துச் செல்லும் உங்கள் பயணக் கட்டுரை மிக அழகாக இருக்கிறது. தொடருங்கள் தரிசிக்க ஆவலாக உள்ளோம்.

S.HARIHARAN said...

nalla thamizh nadai kanndu viyanthen enil migaiyanru. vaazhthukkal.
hariharan pondy

Ashwinji said...

நமஸ்தே ஷிவா ஜி.
நேபாளப் பயணம் செல்லுமுன்பு தங்களைச் சந்தித்து ஆசி பெற்றதையும், இறையவன் திருவருளும் தங்களைப் போன்ற சிவனடியார்களின் ஆசிகளும் எமது பயணம் முழுமையும் கவசமாக உடன் நின்றதை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.பணிந்து வணங்குகிறேன்.

Ashwinji said...

ஹரி அண்ணாவுக்கு,
பாராட்டுக்கு என் இதய நன்றி.
தனித் தமிழில் எழுதுதலில் நீங்கள் ஆர்வமுடன் இயங்கிய கால கட்டங்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் மீது தணியாத தாகமும், ஆறாத காதலும் எனக்கு உண்டாகக் காரணமானவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை என்னால் எப்படி மறக்க இயலும்?
பணிவன்புடன்.