Thursday, October 6, 2011

பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011 - Part 2


அன்பர்களுக்கு எனது 

துர்கா பூஜை வாழ்த்துக்கள்.

நேபாளப் பயணக் கட்டுரை தொடர்கிறது:

பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011
இடுகை இரண்டு:
ஓம் நமசிவாய.
எந்தையும் தாயும் ஆனாய் போற்றி.
சிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.

நான் தற்சமயம் பணிபுரியும் அலுவலகம் சென்னையில் அயனாவரத்தில் உள்ளது. கடந்த 1985 முதல் 1992 வரை இந்த அலுவலகத்தில் பணியில் இருந்த போது நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்கள் அனைவரும் சிவனடியார்கள்.

இப்போது போலவேஅப்போதும் சத்சங்கமும்சாதுசங்கமும் நேர்ந்து கொண்டிருந்தது. பின்னர் நேர்ந்த பணி மாற்றல் காரணமாக, எனக்கு அந்த இறையன்பர்களுடனான தொடர்பு விட்டுப் போயிற்று. நான் சென்ற இடங்களில் அதற்கேற்ற சத்சங்கங்கள் அமைந்ததும் ஒரு காரணமாயிற்று. 

இருப்பினும்பழைய நண்பர்களுடனான தொடர்புகள் முற்றிலும் அறுந்து போகவில்லை. ஏதாவது ஒரு ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சியில் நான் அவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தேன். பின்னர் மீண்டும் 2009ல் அதே அலுவலகத்துக்கு சென்ற போது அந்த  நண்பர்களை மீண்டும் சந்திக்க மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் சிவனருளே. 

கடந்த ஆண்டு(2010) அமரநாதம் செல்வதற்கான ஆரம்ப விதை தொண்ணூறுகளில் எனக்கு அயனாவரம் அலுவலகத்தில்தான் தூவப்பட்டது என்பதை எனது அமர்நாத் பயணக் கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன். அன்பர்களுடன் அமரநாதம் சென்று வந்த பின்னர், இமயம் என்னை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது. இந்த ஆண்டும் ஒரு பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம மேலோங்கி இருந்தது. பின்னர் எங்களது தினசரி மதிய இடைவேளை சந்திப்பின் போது அடுத்த பயணம் எங்கேஎப்போதுஎப்படி என்ற சுவையான விவாதங்கள் துவங்கின. 

இந்த முறையும் அமர்நாத் செல்லலாம் என்று சில நண்பர்கள் கூறினர்சிலர் சார்தாம் யாத்ரா (பத்ரிகேதார்கங்கோத்ரியமுநோத்ரி) செல்லலாம் என்று கூறஎனக்கோ அடுத்த யாத்திரை திருக்கயிலாயமாக அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கயிலைப் பயணம் பற்றி நண்பர்களிடம் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கும் கயிலை யாத்திரையில் ஆர்வம் துளிர் விட்டது.

ஆனால், கயிலாய யாத்திரைக்கு பாஸ்போர்ட் தேவை. அது எங்களிடம் இல்லை. எனவே பாஸ்போர்ட் பெற மனுக்களை பெற்று விண்ணப்பித்தோம். எந்த தொல்லையும் இன்றி புத்தாண்டின் போது (ஜனவரி 2011ல்) சிவப்பரிசாக பாஸ்போர்ட் எங்களை வந்து சேர்ந்தது. 

ஏற்கனவே அமர்நாத் சென்ற குழுவினரிடையே திருக்கயிலாய யாத்திரை செல்வது பற்றி தொடர்ந்து சிந்தனை செய்து வந்தோம். ஆனால் நாளாக நாளாக அவர்களது தவிர்க்க இயலாத பிரச்சினைகள் காரணமாக திருக்கயிலைப் பயணத்தை துவங்க முடியாத நிலையில் இருப்பதை வருத்ததுடன் என்னிடம் தெரிவித்துவிட்டார்கள். 

(பகிர்வுகள் தொடரும்)

--

   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

No comments: