சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
நன்றி: http://balakumaranpesukirar.blogspot.com/
Monday, October 19, 2009
வயதான பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?
(எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில் சொல்லுகிறார்:)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தாங்கள் கூறுவது சரிதான். ஆன்மீகம் வயதால் வருவது போன்ற தோற்றம் இருந்தாலும் அது அனுபவத்தால்(வாசனை) வருவது. வாசனை ஒரு மனிதனை வழி நடத்துகின்றது. இந்திரியங்களின் வாசனையால் வளரும் மனிதன் அவை தளர்ந்தவுடன் ஆன்மிகத்தை நாடினால் அந்த இந்திரியங்கள் அப்போது கைகொடுக்காது. ஆனால் சத்சங்க வாசனையால் ஒருவன் இளம் வயதில் ஆன்மீகத்தை நாடினால் அவனுக்கு வயதானலும் இந்திரியங்கள் கைகொடுக்கும். காலத்தே பயிர் செய் என்பது போல காலத்தே புண்ணியமும் செய்யவேண்டும். நன்றி.
வணக்கம் பித்தன் அய்யா
தங்களின் விளக்கம், மிக அருமை.
பாலகுமாரனின் விரிவான உரையை, சுருக்கமாக விவரித்து விட்டீர்கள்.
நன்றி.
Post a Comment