Monday, September 26, 2011

சிவனருள் பொலிக :- பசுபதிநாதரைத் தரிசித்தேன். (நேபாளப் பயணம் - 2011)


தென்னாடுடைய சிவனே போற்றி.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

ஸ்ரீ பசுபதிநாதர் சன்னதி (காத்மாண்டு-நேபாளம்)

2011 செப்டம்பர் பதிநான்காம் தேதி சென்னையில் இருந்து துவங்கிய நேபாளப் பயணம் செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு எங்கள் குழுவினர் சென்னை திரும்பியதும் நிறைவடைந்தது. 

காத்மாண்டுவில் நாங்கள் பசுபதிநாதர், ஜல நாராயணர், மற்றும் சுயம்பு நாதர் என்கிற புத்தநாதர், புராண குகேஸ்வரி தேவி (சக்தி பீடம்), நேப்பாளி கூர்காக்களின் குலதெய்வமான மனகாம்னாதேவி மற்றும் பகவான் புத்தர் பிறந்த லும்பினி போன்ற திருத்தலங்களுக்கு சென்று மனசாரத் தரிசித்தோம். 

எமது பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்திய அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் எனது இதய நன்றி. 

பயணத்தின் போது தொடர்ந்து எங்களுடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பர்களுக்கும் எங்கள் நன்றி.

எமது நேபாளப் பயணம் இனிதாக அமைய பெரிதும் உதவிய திரு தேவராஜன் (சென்னை), மற்றும் அவர் மூலம் அறிமுகமாகி கோரக்பூர் சென்ற போது எங்களுக்கு பெருமளவில் உதவி இருக்கும் கோரக்பூர் கீதா பிரஸ் பெரியவர் ஸ்ரீ விஷ்ணு பிரசாத் பட்வாரி, அறங்காவலர் ஸ்ரீ ஈஷ்வர் பிரசாத் பட்வாரி மற்றும் கீதா பிரஸ் அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

எங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் எல்லாம் வல்ல சிவ பெருமானின் பெரும் பேரருளை மகிழ்ந்து பணிந்து போற்றுகிறேன். 

ஓம் நமசிவாய.

வெகு விரைவில் படங்களுடனும் வித்தியாசமான செய்திகளுடனும் எமது நேபாள பயணக் கட்டுரை தொடர் வெளியாகும். 
--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

1 comment:

divinesoul said...

waiting for your photos and more details of this nepal
trip your blog is interesting and informative