சிவாயநம
இஃது ஆன்மாக்கள் உய்வதற்கான ஐந்தெழுத்து மந்திரம்.
இம்மந்திரம்-
- இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாய் அமைவது.
- நாவினுக்கு அருங்கலம் ஆவது.
- செவிகளுக்குத் தேனாவது.
- மெய்யின் பால் பணிய வேண்டுவது.
- சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லது.
- ஈர்த்து நம்மை ஆட்கொள்வது.
- நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடுப்பது.
- 'அவன்' அருளைக் கூட்டுவிப்பது.
- மெய்ஞ்ஞானம் ஊட்டுவிப்பது.
- வினைப் பிறவி வாராமல் விளங்க வைப்பது.
- நள்ளிருளில் நட்டம் பயிலும் நாதனை காணச் செய்வது.
- நன்னெறியும், நல்கை விளக்கும் ஆவது.
- நெஞ்கம் நைந்து நினைய வேண்டுவது.
- முந்தை வினை முழுவதும் ஓய வைப்பது.
- கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருக்குவது .
- இடர் களைந்து இன்பூட்டுவது.
- 'அவன்' தாளை 'அவனருளாலே' வணங்கவைப்பது.
- மண்ணில் நல்ல வண்ணம் வாழவைப்பது.
- அல்லல் பிறவி அறுக்க வல்லது.
- திகட்டாத பேரின்பத் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவது.
ஓம் நமசிவாய
சிவாயநம ஓம்.
Wednesday, December 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment