குர்கான்: அரியானாவில் படபிடிப்பில் கலந்து கொள்ள வந்த ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட், தனது குழந்தைகளுக்கு லட்சுமி, கிருஷ்ணர், கணேஷ் என பெயர் வைத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட். ஆஸ்கார் விருது பெற்ற இந்த நடிகை, அரியானா மாநிலம் குர்கானில் நடக்கும் "ஈட்,ப்ரே,லவ்' என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குர்கானில் பட்டாவ்டி என்ற இடத்தில் 25 ஏக்கரில் அமைந்துள்ள சுவாமி தரம் தேவ் தலைமையிலான ஆஸ்ரமத்தில் இந்த படபிடிப்பு நடக்கிறது. 500 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். 100 படுக்கைகள் கொண்ட முதியோர் இல்லமும் இங்கு செயல்படுகிறது. ஆஸ்ரமத்தில் சமையல் செய்யும் பெண் வேடத்தில் நடித்த ஜூலியா, ஆஸ்ரமத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆஸ்ரமத்தின் சூழல் பிடித்து போன நிலையில், சுவாமி தரம் தேவை சந்தித்து ஆசி பெற்ற ஜூலியா ராபர்ட், தனது ஐந்து வயது இரட்டை குழந்தைகளின் ஹேசல்,பினேயஸ் என்ற பெயரை மாற்றி இந்து பெயர் வைக்க கோரினார். இதையடுத்து, இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தைக்கு லட்சுமி என்றும் மற்றொரு குழந்தைக்கு கணேஷ் என்றும், இரண்டு வயதான மூன்றாவது குழந்தைக்கு ஹென்ரி என்ற பெயரை மாற்றி கிருஷ்ண பல்ராம் என பெயரிட்டார்.
நன்றி: தினமலர் நாளிதழ் (29.09.2009)
2 comments:
வலைப்பக்கம் நன்றாக உள்ளது.
நீளமான கட்டுரைகளோடு சிறு சிறு கட்டுரைகளையும் மிகுதியாகக் கொடுங்கள்.
வலைப்பக்கம் சிறப்புறவும் படிப்பவர்க்குப் பயன்படவும் நீங்கள் தொடர்ந்து எழுதவும் திருவருள் துணைநிற்பதாக.
மதிப்பிற்குரிய நம்பி அய்யாவுக்கு வணக்கம்,
என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து உங்கள் பொன்னான நேரத்தினை செலவிட்டு கருத்துரை வழங்கியமைக்கு சிரம் தாழ்ந்த இதய நன்றி. தங்கள் மேலான பின்னூட்டங்கள் எனக்கு பக்க பலமாக விளங்கும். இனி சிறிய கட்டுரைகளை வெளியிடுவேன். தொடர்ந்த ஆதரவை வேண்டுகிறேன்.
Post a Comment