திருச்சிற்றம்பலம்.
பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011
இடுகை ஒன்று.
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்பத்தர் பரசும் பசுபதி தானென்றே.
(திருமந்திரம் - 2623)
பஞ்சமுக சதாசிவர்
(நன்றி : கூகிள் இமேஜஸ்)
எல்லாம் வல்ல அம்மையப்பனை வணங்கி இந்த ஆண்டு நான் நேபாள யாத்திரை சென்று வந்த அனுபவங்களை பகிர துவங்குகிறேன்.
கடந்த ஆண்டு (2010) நம் பரமர் அமரநாதரையும், அகில புவன அம்பிகை வைஷ்நோதேவியையும் தரிசனம் செய்து வரும் வாய்ப்பு கிடைத்தது. அமர்நாத் சென்று வந்த பின்னரோ, கொண்டாடும் பக்தர் தம் இதயத்தில் உறையும் ஈசன், பனி உறையும் இமயத்தை தன்னிடமாக கொண்ட நாதன், என் உள்ளத்தில் புகுந்தது மட்டுமின்றி உள்ளத்தை கவர்ந்தும் விட்டார். எனவே, தினம் தோறும எண்ணங்கள், செயல் எல்லாம் அவனே நிறைந்து நிற்க ஆரம்பித்துவிட்டான்.
எந்த அருகதையும் இல்லாத எனக்கு சிவம் காட்டி வரும் அன்பும், ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க அரியது என்பதற்கு தின வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளே ஆதாரமாக அமைந்து விட்டது. எங்கேயும் எப்போதும் சத்சங்கமாக அமைய சிவபெருமான் ஆசி கிட்டியது.
வெளியூர் பயணிக்கும் போதெல்லாம் அடியார் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆகிவிடுவார். அவரது உதவிகள் எனக்கு தேவையானதாகவே இருந்திருக்கும். அலுவல் பணியாக செல்லும் போது கூட நான் சந்திக்க நேரிடும் அன்பர் ஒரு இறையடியாராக இருப்பார். எனது தேவைகளும் தடங்கல் ஏதுமின்றி அவனருளால் இனிதே நிறைவேறிவிடும்.
அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே.
(திருமந்திரம் - 2624)
சிவனருளாலே அமைந்த சிவனடியார்களின் சத்சங்கம் என்னை இந்த ஆண்டு நேபாளம் வரை அழைத்து சென்று உலக ஆன்மாக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் பசுபதிநாதரை தரிசிக்க செய்தது.
(பகிர்தல் தொடரும்)
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
அமர்நாத் பயண அனுபவங்களை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்:






