Wednesday, September 12, 2012

அமரநாதர் அழைக்கிறார்: பகுதி 5: புனிதக் குகை நோக்கி..

ஓம் நமசிவாய.

அமரநாதர் அழைக்கிறார்..
சென்னை இறையடியார் செந்தில் குழுவினரின் அமர்நாத் அனுபவங்கள்

பகுதி ஐந்து: புனிதக் குகை நோக்கி

ஆம்....இறைவன் ஆவன செய்தார்......

அவர்  எங்கள்  அனைவரையும் அவரது  இரு ஜீப்களில்  ஏற்றிக்கொண்டு  ராணுவ  gate-i தாண்டி  கூட்டி சென்று இறக்கி  விட்டுநடந்து  செல்ல  வேண்டாம்  என்று  அறிவுறுத்தி  குதிரைகாரர்களிடம்  மிகுந்த  பேரம்  பேசி , ஆளுக்கு  சுமார்  1000 ருபாய் கட்டணத்தில்  ஏற்றி  அமரநாதரை  நோக்கி அனுப்பி வைத்தார்அப்போது  மணி  பகல்  12 மணி  இருக்கும் …."

"குதிரைகாரர்கள் உடல் பருமனாக இருப்பவர்களை ஏற்ற தயங்கினர்......பணம் அதிகமாக கேட்டனர்மிகவும் பேரம் பேசி எங்களுடன் வந்தஅனைவரையும் குதிரையில் ஏற்றி விட்டு ஜீவா-சார் கிளம்பிவிட்டார்.

மேலும் எங்களை மிகுந்த பாதுகாப்புடன் குதிரையில் செல்ல ஆலோசனை கூறினார்.

மெதுவாக குதிரை மலை ஏற ஆரம்பித்தது.......

நான்எனது இரு அண்ணன்கள் மற்றும் சிவா மூன்று குதிரைகளில் மெதுவாக சென்றோம்..எங்களுடன் வந்தவர்கள் முன்னேசென்றுவிட்டார்கள்.....

பின்பு நாங்களும் எங்கள் அண்ணன்களையும் சிவாவையும் விட்டு முன்னே வந்துவிட்டோம்.....

சவாலான மலை ஏற்றத்தில் குதிரை ஏறுகிறது.....இந்தப்பக்கம் கூர்மையான மலைப் பாறைகள்.....அந்தப்பக்கமோ அதல பாதாளம்......

குறுகலான பாதையில் நடந்து செல்பவர்கள்குதிரையில் வருபவர்கள்.....அமரநாதரை காண குதிரையில் செல்வோர்கள்மிக கவனத்துடன் குதிரையில் அமர வேண்டும்... தங்கள் கால்களை குதிரையின்உடலோடு ஒட்டிக்கொண்டு வரவேண்டும்...ஏன் என்றால்கூறிய மலை கற்கள் கால் முட்டிகளை பதம் பார்த்துவிடும்....மற்றும் எதிரேவரும் குதிரைகள் இடித்துவிட கூடும்.......எனவே கவனம் வேண்டும்......

இறைவனை பிரார்த்தித்தபடி........குதிரையின் கயிற்றை வலுவாக பிடித்தபடி..............குதிரைக்காரரின் சொல் கேட்டபடி........[மலைஏறும்போது முன்னோக்கியும் மலை இறங்கும்போது பின்னோக்கியும் நகர சொல்வார்.] அமரநாதர் வீற்றிருக்கும் குகையை  நோக்கி......... மெதுவாக முன்னேறி செல்கிறோம்.....

வழியில் சில இடங்களை லன்கரில் இலவச உணவுதேனீர் அளித்துக்கொண்டிருந்தனர்....நாங்கள் குதிரையில் சென்றதால் அவற்றைகடந்து மெதுவாக சென்றோம்......

வழியில் குதிரை புல் மேய ஐந்து நிமிடம் பயணத்தை நிறுத்தினோம்.....புகைப்படம் எடுத்தோம்.......தேனீர் அருந்தினோம்.......

மீண்டும் குதிரை பயணம் ஆரம்பித்தோம்.........

சங்கம்டாப் என்ற இடத்தில ராணுவத்தினர் தடுத்து மிக சரிவான பாதையில் இறங்கி நடந்து செல்ல கூறினர்குதிரை பின் வரும் என்றுகூறினர்.   இறங்கி நடந்தோம்.....புகைப்படம் எடுத்தபடி.......

பின்பு குதிரைக்காரகள் எங்களுக்காக காத்திருந்தார்........மீண்டும் பயணத்தை ஆரம்பித்தோம்.....அதோ....எங்கள் உடன் வந்தவர்கள் மேலேஏறிக்கொண்டிருக்கிறார்கள்.......திரும்பி பார்த்தால் அதோ....சிவாவும் எங்கள் அண்ணனும் சங்கம் டாப்பில் இருந்து இறங்கி நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள்......

எங்கள் குழுவினர் அனைவரையும் பார்த்துவிட்டோம்..... எனினும் சிலரை காண முடியவில்லை....... இறங்கி நமக்காக காத்திருப்பார்கள் என்று எண்ணியவாறே பயணத்தை தொடர்ந்தோம்.....

பனிமலை நெருங்கியது.......

மிகவும் கடினமான சவாலான உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய இறக்கத்திலும் ஏற்றத்திலும் குதிரை அனாயசமாக இறங்கிஏறியது........

நாங்கள் இறைவனை நினைத்தபடி...........

ஒருவாறாக பனிமலையை அடைந்தோம்.....

எங்களுக்கு முன் சென்றவர்கள்...அங்கே இறங்கி காத்திருந்தார்கள்......

நாங்களும் இறங்கி குதிரைக்கான பணத்தை கொடுத்துவிட்டுசிவாவுக்க்காகவும் அண்ணனுக்காகவும் காத்திருந்தோம்....அவர்கள் தான் கடைசி.......

அதோ வந்துவிட்டார்கள்.........

முன் குறிப்பிட்ட சவாலான பாதையில் இறங்கி நடந்தே வந்து விட்டார்கள்......

எங்கள் குழுவின் 8 வயது (பாலசிவன்) சிறுவன் சிவவர்ணேஸ்வரன் முகத்தில் எந்த அச்ச உணர்வும் இல்லாதவாறு நடந்து வருகிறான்........

சிறுவன்....எப்படி வருகிறான்.....எல்லாம் இறைவன்.....அவனே இறைவன்......அவரே இறைவன்......என்று மெய்சிலிர்த்தபடி......அவர்களுக்கு கை காட்டினோம்....... 

"மிகுந்த கடினமான மலைப் பாதைகள்......மிகுந்த செங்குத்தான குறுகலான பாதைகள்.......சிறிய பாதையில் நடந்து செல்பவர்கள்குதிரையில் செல்பவர்கள்அதேபோன்று இறங்கி வருபவர்கள் என்று ஒரே புழுதிபோக்குவரத்து நெரிசல்........

அச்சப்படவேண்டாம்.........அமரநாதரை நினைத்து பயணத்தை தொடர்ந்தோம்..........

"மாலை  4 மணிக்கு அமரநாதர்  குகைகோவிலுக்கு 2 கி.மீ முன்னரே  குதிரையில் இருந்து நாங்கள் இறக்கி  விடப்பட்டோம் ….. குதிரை  இறக்கிவிடும்  இடத்திலேயே எங்கள் குழு அடியார்களை அனைவரையும் குழுமியிருக்க  சொல்லிருந்தோம் …. ஆனால் இருவர்  மட்டும் காணவில்லை . தேடிப் பார்த்தோம்  ….அவர்கள் காணக் கிடைக்கவில்லை.……"

ஒரு வேளை குகையை நோக்கி சென்று  இருப்பார்கள்  என்று  நினைத்துகொண்டு  நாங்கள்   தொடர்ந்து நடக்க  ஆரம்பித்தோம்  ….

பயணம் தொடர்கிறது..

No comments: