Sunday, September 2, 2012

அமரநாதர் அழைக்கிறார்.. 3. இமயத்தை நோக்கி.


அமரநாதர் அழைக்கிறார்..
சென்னை இறையடியார் செந்தில் குழுவினரின் அமர்நாத் அனுபவங்கள்

பகுதி மூன்று: இமயத்தை நோக்கி...

யாத்திரையின் 3ம் நாள்ஜூலை  16, 2012.

ரயில் பயண நேரப்படி காலை  6.45 மணிக்கு  ஜம்மு  ரயில்  நிலையத்தை  அடைந்தது.  ஜம்மு ரயில் நிலையம் மிகுந்த கூட்டத்துடனும் பரபரப்புடனும்காணப்பட்டது..........

ஹரித்வார் ரயில்  நிலையம்போலவே இருந்தது......... பழக்கப்படாத முகங்கள்.......... புதிய இடம்..........யாத்திரை ஆரம்பம்.......[ஏற்கனவே எதிர்பாராத காலதாமதங்களைப் பற்றி வேதாந்தவைபவம் வலைப்பூவில் முன்னரே படித்திருந்ததால் மனதில் மெல்லிய உதறல்.......யாத்திரை நிறைவாக முடிய வேண்டுமே என்று.....] இறைவனை  நினைத்து மெய் மறந்து வேண்டிநிலையத்தை விட்டு வெளியில் வந்தோம்....

அனைத்து ஏற்பாடுகளையும் [ பயண ரயில் முன்பதிவு மற்றும் தரிசன முன்பதிவுசெய்து முடித்தபின்ஜூன் முதல் வாரத்தில் ஒரு நண்பர்மூலம் ஜம்முவில் உள்ள ஒரு travels agencyயை  தொடர்பு கொண்டு பதினொரு பேருக்கான வாகனம் புக்கிங் செய்து இருந்தோம்.

அவர்கள் டிரைவரது செல்பேசி எண் கொடுத்து இருந்தனர்....அதை தொடர்பு கொண்டோம்.......அவரும் மிகச்சரியாக வந்து விட்டார்.......எங்களை அடையாளம் கண்டு விட்டார்.....

ஆனால் ரயில் நிலையத்திற்குள் அவரது வேன் வர அனுமதி இல்லாததால் 3கிலோமீட்டர் தொலைவில் வண்டியை நிறுத்தி இருந்தார்....... 

எங்களை அங்கே அழைத்து சென்றார்....... Van -ல் ஏறி அமர்ந்தோம்........

ஜெய் போலேநாத் என்ற இறைநாமத்தை உரக்க கூறியபடி,ஒரு சவால் நிறைந்த இறைதேடலை தொடங்கினோம்.. ஜெய் போலேநாத் …….ஜெய் போலேநாத்..........

Van தற்போது ஜம்முவில் இருந்து பால்டல் நோக்கி சென்று கொண்டிருந்தது........

வழியில் முக்கிய நகரங்கள்.... உதம்பூர்ராம்பான்பாநிஹால்அனந்த்நாக்ஸ்ரீநகர்சோனாமார்க்

உதம்பூரில் டிரைவரின் இல்லத்தில் நிறுத்தி உடை மாற்றி வந்தார்.....

அருகில் இருந்த உணவு விடுதியில்பல் விளக்கி முகம் கழுவிக்கொண்டோம்சிலர் தேனீரும்சிலர் காலை உணவும் அருந்தினோம்...உண்டோம்......

வண்டி மீண்டும் கிளம்பியது...... [சென்னையில் இருக்கும்போது பலர் கூறியது........டெல்லியில் இருந்து ஜம்மு போகும்போதே மிகுந்த குளிர் இருக்கும் என்று.......ஆனால்உண்மையில்   ஜம்முவில் இருந்து பால்டல் செல்லும் வழி முழுவதும் குளிரவே இல்லை..........]

வண்டி மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருக்கிறது.....

வண்டி சக்கரத்திற்கு காற்று பிடிப்பதற்கும் check செய்வதற்கும் நின்றபோது எங்களுடன் வந்த அடியவருக்கு மலைப்பாதை ஒத்துக்கொள்ளாததினால் வாந்தி எடுத்துசோர்வாக படுத்து விட்டார்....அவர்க்கு சிறிய முதலுதவி அளித்தோம்......

அங்கும் தேனீர் அருந்தினோம்.......

வண்டி ராம்பான் நகரத்தை தாண்டியது........அங்கே முதல்முறையாக லங்கர்- கண்டோம்....[லங்கர் என்பது யாத்ரிகர்களுக்கு இலவசஉணவுகுடிநீர்தேனீர் அளிக்கும் இடம்]. அந்த இடத்தில் டிரைவர் சிறிது நேரம் உறங்கி களைப்பு நீங்கினார்......

எங்களுடன் வந்த ரவி என்ற அடியாரின் உறவின் பால்டல் ராணுவ காம்பில் இருப்பதாக கூறினார்எனவே அவருக்கு தொலைபேசினோம்..... அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் நண்பர் ஜீவன் சார்- தொலைபேச சொன்னார்.......

அவருக்கு தொடர்பு கொண்டு நாங்கள் இருக்கும் இடத்தை கூறினோம்.....

முடிந்தவரை இன்றே பால்டால் வந்துவிடும்படியும் ஸ்ரீநகர் அடைந்ததும் பை பாஸ் சாலையில் 'லெஹ்நெடுஞ்சாலையில்வந்துவிடும்படியும் கூறினார்......

டிரைவரை எழுப்பி தகவலை கூறிஅவரை வண்டி எடுக்கச் சொன்னோம்...
இதற்கிடையில் சில அடியவர்கள் லங்கரில் உணவு உண்டனர்.....
நாங்கள் தேனீர் அருந்தினோம்......வண்டி கிளம்பியது......

டிரைவருக்கு இன்றே பால்டால் செல்ல முடியாது என்ற எண்ணத்திலேயே வண்டியை ஒட்டி வந்தார்......

நாங்களோ இன்றே பால்டால் செல்லவேண்டுமே என்ற எண்ணத்திலேயே அமர்ந்து வந்தோம்.........

ஒரே இடத்தில் இருவர் இருவேறு எண்ணங்களுடன் அமர்ந்து வருகிறோம்....இறைவனின் எண்ணம் என்னவோ?

ஐந்து மணியளவில் ஸ்ரீநகர்- அடைந்தோம்....[ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரம் ஜம்மு. கோடைகால தலைநகரம் ஸ்ரீநகர்]

ஸ்ரீநகரில் மிகுந்த சாலை நெரிசல்........ஜீவன் சார் சொன்ன பாதையில் செல்லாமல் வேறு பாதையில் வண்டியை ஓட்டினார் டிரைவர் [அவருக்குத்தான் இன்றே பால்டால் செல்லவிருப்பம் இல்லையே...!!]

ஸ்ரீநகர் தால் ஏரி வழியாக குறுக்குப்பாதையில் வண்டியை செலுத்தி வேகமாக சென்றார்......

நாங்களும் எப்படியாவது சென்று விடமாட்டாரா என்று சாலையை பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.......

ஒன்பது மணி அளவில் மனிகாம் என்ற இடத்தில் ராணுவத்தினர் கேட் போட்டுவிட்டனர்..........அடடா...........என்ன செய்வது.........டிரைவர் நினைத்தது நடந்தது.........இறைவன் எங்களுக்காக நினைத்ததும் நடந்தது.........

சரி என்றுஅங்கேயே ஒரு டென்ட் வாடகைக்கு எடுத்து தேவையான உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கே வைத்துவிட்டு அங்கேஇருந்த ஒரு லங்கரை அடைந்தோம்....வயிறார சுவையான உணவும் தேனீரும் அருந்தினோம்.....பால சிவனுக்கு snacks தின்பண்டங்களும்எடுத்துக்கொண்டு மீண்டும் டென்ட்க்கு வந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தோம்......

எங்கள் திட்டப்படி அமரனாதர் தரிசன தேதி ஜூலை பதினேழு....நாங்கள் இருப்பதோ பால்டால்-க்கு என்பது கிலோ மீட்டர்க்கு முன்னர்...... தேதி ஜூலை பதினாறு........திட்டப்படி இறைவன் தரிசனம் அளிப்பாராகுகையை அடைந்து விடுவோமா?

படங்களை அடுத்த இடுகையில் வெளியிடுவோம்.

தொடரும்.... 

No comments: