Tuesday, July 26, 2011

1. சிவானந்தம்-பரமானந்தம்.


வலைப்பூ அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்.

சுவாமி சிவானந்தர் பேரருளாளர். பிரசங்கிசங்கீர்த்தன சாம்ராட்ஞானச் சுடர்மக்கள் தொண்டர்தீனதயாளன்அநுபூதி பெற்ற மகான். அவருடைய சொற்பொழிவுகளைப் படிக்கும் போது சுவாமிஜியின் பல்துறை உருவம் நமக்குப் புலனாகும்.

சிவானந்தரைக் கண்டு 'தெய்வத்தைக் கண்டோம்என்று மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் ஆத்மஞாநியான சிவானந்தரோ மக்கள் உருவில் மகேசனைக் கண்டு உளம் பூரித்தார்.

சுவாமிஜி சொல்லுகிறார்: "எங்கெங்கு சென்றேனோ அங்கெல்லாம் விராட்-நாராயணன்து தரிசனம் எனக்குக் கிடைத்ததது. ஆயிரமாயிரம் முகங்களும்ஆயிரமாயிரம் கைகளும்கால்களுமுடைய அந்த நாராயணனை என்னைச் சுற்றிலும் கண்டு அவனது மார்பில் தவழ்ந்தேன்". 

"எல்லாம் இறைவன்இறைவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை" என்ற உணர்விலே வாழ்ந்த மகான் சிவானந்தர். 
("இமயம் முதல் இலங்கை வரை" நூலின் தமிழ்ப் பதிப்பிற்கான முன்னுரையில் இருந்து)


சிவானந்தம்-பரமானந்தம்.

sivananda.jpg
சுவாமி சிவானந்த சரஸ்வதி.

வருகை:     08 Sept 1887
மகாசமாதி: 14 July  1963


1. அமைதிக்கும் பேரின்பத்துக்கும் வழி.

“அமைதியும், இன்பமும் உங்களுக்கு வேண்டுமா? அப்படியானால் பிறருக்கு ஒத்துப்போதல், இணக்கம், விட்டுக் கொடுத்தல் இவை அவசியமானவை. ஒத்துப்போக முடியாததால் தான், சண்டை, பூசல்கள், போர் முதலியவை நிகழுகின்றன. ஒரு குமாஸ்தாவால் தன் மேலதிகாரியோடு ஒத்துப்போக முடிவதில்லை. ஒரு திவானால் மகாராஜாவோடு ஒத்துப்போக முடிவதில்லை. மனஸ்தாபங்களும், சண்டைகளும் தான் விளைவு. கணவன் மனைவி ஒத்துப்போக முடியாவிட்டால், வீடே போர்க்களமாகி விடுகின்றது. ஒத்துப்போகத் தெரிந்து கொண்டால்தான் வீட்டில் அமைதியும் ஆனந்தமும் நிலவும்.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. உங்களுடைய ஆணவத்தை உடைத்துச் சுக்குநூறாக்கி வெளியே தள்ளினால்தான் ஒத்துப்போதல் சாத்தியமாகும். இந்த ராஜச குணம்தான் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம். இது உங்களைக் குனிய விடாது. குழாயில் ஜலம் குடிக்க வேண்டுமானால், வளைந்து தான் குடிக்க வேண்டும். அப்படித்தான் அமைதி, இன்பம், நல்லிணக்கம், என்ற நீரைப் பருக வேண்டுமென்றால், அடக்கமிருந்தால்தான் முடியும்.

அடக்கம் அமரருள் உய்த்து விடும். அடக்கமுள்ளவனால் உலகத்தையே வெல்ல முடியும். அடக்கமுள்ளவனை எல்லோரும் நேசித்து, அன்பு காட்டி, வந்திருக்கிறார்கள். அவனால் தான் ஒத்துப்போகும் பண்பும், இணக்கமும், பிறர் கருத்துக்கு மதிப்புக்கொடுக்கும் இயல்பும் வளரும்..

(9.9.1950 அன்று ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து யாத்திரையை துவங்கு முன்னர் சுவாமி சிவானந்தர் ஆற்றிய அருளுரை.)

(சிவானந்தம்-பரமானந்தம் தொடர்ந்து பிரவகிக்கும்)

குறிப்பு: இமய ஜோதி சுவாமி சிவானந்தரின் சொற்பொழிவுகளை இங்கே பகிர்ந்துகொள்ளும் இந் நல்வாய்ப்பினை எனக்குத் தந்து கொண்டிருக்கும் இறைவனைப் போற்றி பணிகிறேன். இந்த இழைக்கு சிவானந்தம்-பரமானந்தம் எனப் பொருத்தமாகப் பெயர் சூட்டிய இரத்தினமாலை குழும நிறுவனர்-இறையடியார் திரு.சங்கர்குமார் அவர்களை பணிந்து வணங்குகிறேன். எனது கவனக் குறைவின் காரணமாக தட்டச்சுப் பிழை ஏதேனும் பதிவில் ஏற்பட்டிருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து சுட்டிக் காட்டினால் சரி செய்து விடுகிறேன். ஓம் சிவோஹம்.

-- 
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

1 comment:

Balu said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி