அனைவருக்கும் எனதன்பான வணக்கங்கள்.
2009, மார்ச்சு மாதம் வேதாந்த வைபவம் என்னும் இந்த வலைப்பூவை துவங்கினேன். இரண்டாண்டுகளைக் கடந்து வலைப்பூ மலர்ந்து உங்களிடையே நறுமணம் வீசிக் கொண்டிருப்பது இறையருளாலும், வலைப்பதிவு அன்பர்களின் ஆதரவினாலும் தான்.
இது வரை உலகெங்கிலும் சுமார் நான்காயிரத்து ஐநூறு பேருக்கும் மேலாக வேதாந்த வைபவம் வலைப்பூவினை பார்வையிட்டு படித்திருக்கிறார்கள் என்று பிளாக்கர் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. என் உளமார்ந்த நன்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
எனது அமர்நாத்-வைஷ்நோதேவி புனித யாத்திரைக் கட்டுரைகள் வெளியான போது நிறைய அன்பர்கள் தொடரினை படித்து ஆதரவினை அன்பான பின்னூட்டங்கள் மூலமாகத் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து எனது நண்பர் கோவிந்த் மனோஹரும் அவரது யாத்திரை அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
'கர' வருஷ தமிழ்ப் புத்தாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் எல்லாருக்கும் எனது அட்வான்ஸ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு எனது பணியினை தொடர இறையருளை வேண்டுகிறேன்.
தொடர்ந்து உங்கள் ஆதரவும், இறையருளும் துணை நிற்கும் என்னும் நம்பிக்கையில் வணங்கி விடை பெறுகிறேன். மீண்டும் பதிவுகளின் மூலம் சந்திப்போம்.
அன்புடன்,
அஷ்வின்ஜி.
No comments:
Post a Comment