Tuesday, January 15, 2019

தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.



வையகம் முழுதும் வாழும் இந்துக்கள் 
மகிழ்வோடு கொண்டாடும், 
லோஹ்ரி, பொங்கல் பிஹூ 
மற்றும் 
மகர சங்கராந்தி பண்டிகை 
நன்னாள் வாழ்த்துக்கள்.

பொங்கும் மங்கலம்
எங்கும் தங்குக.


என்றென்றும் 
அன்புடன்,

உங்கள்
"அன்பே சிவம்"
அஷ்வின்ஜி.

Friday, January 11, 2019

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இறையருளால் சந்திக்கிறோம்......

தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

'அன்பே சிவம் '
அஷ்வின்ஜி
ஓம் நமசிவாய.

நலம்தானே????

வணக்கம் அன்பு நண்பர்களே.

2015க்குப் பிறகு மூன்று நீண்ட ஆண்டுகள் (2016, 2017, 2018 ) இடைவெளி விழுந்து விட்டது.

இந்தப் புதிய ஆண்டில் உங்களை சந்தித்து ஒரு வணக்கம், வாழ்த்துச் சொல்லவே இந்த பதிவு. 

நீண்ண்டு விட்ட இடைவெளிக்கு சில பல காரணங்கள். 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நேர்ந்த ஒரு உடல் நலச் சீர்கேடு என்னை சில ஆண்டுகள் முடக்கி விட்டது. இறைவன் அருளால் மீண்டு விட்டேன். 

இனி எல்லாம் நலமே. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்ரினாதம் மற்றும் கேதாரனாதம் யாத்திரை சென்று வந்தேன். 2015இல் ஜாகேஷ்வர் இரண்டாம் முறை யாத்திரை சென்று வந்த பின்னர் எந்த ஆன்மீக யாத்திரையும் மேற்கொள்ள இயலவில்லை.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜூன் 2018-ல் தான் என்னை மீண்டும் இமயம் அழைத்தது. 

இமயத்தின் கர்வால் பிராந்தியம் நமது பாரத சனாதன தர்மத்துடன் மிக நீண்ட, ஆழமான தொடர்புகள் கொண்டது. மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், பல்லாயிரக்கணக்கான ரிஷிகளும், வியாசர் உள்ளிட்ட மகரிஷிகளும் நடமாடிய பூமி அது. அந்த பூமியில் கால்பதித்து, அந்தக் காற்றை சுவாசித்து, புண்ணிய நதிகளில் நீராடி, கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாக நடமாடும் மகான்களின் அருட்பார்வையின் ஸ்பரிசத்தை பெற்றும், பல சித்தர்கள், முனிவர்கள், சாதுக்களின் ஆசிகளை நேரில் பெற்றும் மகிழ்ந்த தருணங்கள் நம்மை நினைத்து நினைத்து மகிழ வைக்கும் கணங்கள் அவை....

இறைவனின் அழைப்பு இல்லாமல் அங்கே நம்மால் செல்லமுடியாது என்பதை பல முறை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்.

அந்த பயண அனுபவங்களை இனி இங்கே பகிர்கிறேன். 

நம்மிடையே நீண்ட நாட்கள் விட்டுப் போன தொடர்புகளை மீண்டும் நாம் புதுப்பித்துக் கொள்ள அந்தப் பதிவுகள் உதவும் என்று நம்புகிறேன்.

இமயம் சென்று திரும்பிய பின்னர் பொதிகை அழைத்தது. 

2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொள்ள ஒரு மேலும் ஒரு வாய்ப்பினை இறையருள் நல்கிற்று. 

அதைப் பற்றிய விவரங்களையும் இனி வரும் நாட்களில் பகிர்கிறேன்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனி அடிக்கடி சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், 

சிறிய இடைவேளை.

அன்புடன்,

உங்கள் அஷ்வின்ஜி
வேதாந்த வைபவம்.