திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615
தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615
தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616
(மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருப்படை எழுச்சி)
திருச்சிற்றம்பலம்
திருக்கோவில் உழவாரப் பணி மன்றம் சார்பில் வருகிற 04-12-2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பழைய பெருங்களத்தூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப் பணி நிகழ திருவருள் கூட்டி உள்ளது.
இதனைக் கண்ணுறும் அன்பர்கள் நண்பர்களுடன் வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம்.
திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப் படுகிறது.
மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.
திருக்கோவிலுக்கு செல்லும் வழி:
தாம்பரத்தில் இருந்து இத்திருக்கோவில் மூன்று (3) கி.மீ தூரத்தில் உள்ளது. தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம்-படப்பை செல்லும் பேருந்தில் ஏறி முடிச்சூர் ரோட்டில் உள்ள பத்மாவதி திருமண மண்டபம் (அ) பழைய பெருங்களத்தூர் அம்பேத்கார் சிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் நடந்து சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.
1 comment:
உங்கள் வலைக்கு இன்று தான் வருகிறேன்.
பல தகவல்கள் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கூடிய விரையில் சந்திப்போம்!
Post a Comment