Tuesday, September 11, 2012

அமரநாதர் அழைக்கிறார், 4. பால்டாலை நோக்கி...


அமரநாதர் அழைக்கிறார்..
சென்னை இறையடியார் செந்தில் குழுவினரின் அமர்நாத் அனுபவங்கள்

பகுதி நான்கு: பால்டாலை (அமர்நாத் அடிவார யாத்ரீகர் முகாம்) நோக்கி..

ஜூலை பதினேழு............

காலை ஆறு மணிக்கு எழுந்து காலைகடன்களை முடித்துவிட்டு பல் விளக்கி தேனீர் அருந்தி நாங்கள் மேல் கொண்டு பயணிக்க வசதியாக முன்னாள் இரவில் போடப்பட்ட கேட் திறப்பதற்குத் தயாராக இருந்தோம்..... 

6.45க்கு கேட் திறந்தது.....Van-க்கு  இறக்கை முளைத்தது.......[அதிசயம்தான்............ அதுவும் இறைவன் அருள்தான்....வேறென்ன சொல்ல......]

எண்பது கிலோ மீட்டரையும் கடந்து 8.40க்கு பால்டால் பேஸ் கேம்ப்  அடைந்தோம்......[இங்கிருந்து பதினான்கு கிலோ மீட்டர் நடந்தால்இறைவன் தரிசனம்......]

மிக விரைவாக தயாரானோம்.......தேவையான பொருட்களை எடுத்துக்  கொண்டோம்....[ஸ்வெட்டர்ஜெர்கின்பனிக்குல்லாகை உறைகால் உறைபெட்ஷீட்கர்சீப்குளுக்கோஸ்இறை பதிகப்பாடல் புத்தகம்தேவையான பணம்மற்றும் சில....]

உடன் வந்த அடியவர்களையும்விரைவாக கிளம்பும்படி கூறி,பால்டால் மலை அடிவாரத்திலேயே எங்கள் வேன் டிரைவர் நாங்கள் திரும்பி    வரும்  வரை  ஒய்வு  எடுக்கப்  போவதாகக் கூறியதால்கிளம்பினோம்..........

ஜெய் போலேநாத்ஜெய் போலேநாத்......

செல்லும் வழியில் உள்ள கடையில் சிலர் ஷூ வாங்கினோம்....குல்லா வாங்கினோம்....

யாத்திரை குழுத் தலைவர்[விஜய்செருப்புடன் நடந்து வருவதாக கூறினார்......பின்பு பால்டால் கேட் நோக்கி நடந்தோம்.... நடந்தோம்.....

காலை மணி 9 .50 ................

கேட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த போது ராணுவ வீரர்கள் சிலர் எங்களிடம் கேட் மூடியிருக்கும் எனவும்இனிமேல் மறுநாள், (அதாவது ஜூலை பதினெட்டு [புதன்] அன்று) தான் மேலே செல்ல அனுமதி எனக் கூறினர்.

இந்த எதிர்பாராத தடை கண்டு நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம்.........அவ்வாறு மறுநாள்  ஏறினால் எங்களது  பிற  பயண  திட்டங்கள்  மாறுபடுமே  என்று  மிக கவலையுடன்  இருந்தோம் ……..

அவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே எங்களுடன் வந்த ராமலிங்கம் என்ற அடியவரை திடீர் எனக் காணவில்லை.........

அவரை தேடி அலைந்து மைக்கில் அறிவித்து காத்து இருந்தோம்....

எப்படியாவது இன்றே மலை ஏறிவிட வாய்ப்புகளை ஒருபுறம் யோசித்துக் கொண்டும், அதே சமயம் எங்களுடன் வந்து காணாமல் போன சென்ற ராமலிங்கம் அய்யாவை மறுபுறம் தேடியபடியும் இருந்தோம்.....

மீண்டும் ஒருமுறை மைக்கில் அறிவித்தபோது ராமலிங்கம் வந்து விட்டார்.......

தற்போது மலை ஏறும் வாய்ப்புக்கான தீவிர யோசனை........

ஹெலிகாப்ட்டரில் செல்லலாமா என்று விசாரித்தோம்....... அதற்கும் மறுநாள்தான் அனுமதி என்று கூறிவிட்டனர்.....

அடுத்த கட்டமாக ராணுவ நண்பர் ஜீவா-சாரை தொலைபேசியில் அழைத்து எங்களுக்கு மேலே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கூறினோம்.........

அவர் உடனடியாக தனது ஜீப்- அனுப்பி எங்களை அவரது டென்ட்-க்கு அழைத்து வரச் செய்தார்....

எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று விருந்தோம்பினார்..........

எங்கள் பிரச்சினைகளை கவனத்துடன் கேட்டறிந்தார். பின்னர்அவரும்  எங்களை  மறுநாள் பதினெட்டாம் தேதி காலை  செல்லும்படி  முதலில்  கூறினார்நாங்களோ  எப்படியாவது  இன்றே (அதாவது ஜூலை பதினேழு) செல்லுவதற்கு  ஆவன  செய்யும்படி  அவரை  பணிந்து வேண்டிக் கேட்டுக் கொண்டோம். 

அவர் ஆவன செய்வாரா? ஆவன செய்தாரா?  இறைவன் ஆவன செய்வாரா? ஆவன செய்தாரா?

தொடரும்..........

ஒரு அறிவிப்பு:
நான் வழக்கமாக பதிவிடும் கணினி பழுதாகி உள்ளதால் படங்களுடன் சேர்த்து பதிவினை வெளியிட இயலாமல் உள்ளது. எனவே இடுகைகளைத் தொடர்ந்து படித்து வாருங்கள்.
விரைவில் படங்களை வெளியிடுகிறேன்.


No comments: