Wednesday, August 29, 2012

அமரநாதர் அழைக்கிறார்.. 2. விருட்சம் வளர்கிறது..

ஓம் நமசிவாய.

அமரநாதர் அழைக்கிறார்..

சென்னை இறையடியார் செந்தில் குழுவினரின் அமர்நாத் அனுபவங்கள்


பகுதி இரண்டு: விருட்சம் வளர்கிறது...

பாகம்1ல் விதை வளர்ச்சியைக் கண்டோம்.  
இங்கே விதை விருட்சமானதை பயணித்துக்  காண்போம்...]

பாகம்-1 ல் இணைப்பதாக கூறிய form இதுதான்.

இதோ எங்களது பயண திட்டம் [இறைவனின் அருளால்]
July – 14 – சனி  – சென்னையில் இருந்து  கிளம்புதல்
July – 15 – ஞாயிறு – டெல்லி  அடைதல்
July – 15  -ஞாயிறு  – டெல்லியில் இருந்து கிளம்புதல்
July – 16 – திங்கள்  காலை  – ஜம்மு  அடைதல்
July – 16 - திங்கள்  காலை  – ஜம்முவில்  இருந்து  van  மூலம்  பால்டால் நோக்கி கிளம்புதல்
July – 16 – திங்கள்  இரவு  –பால்டால்  அடைதல்
July – 17 – செவ்வாய்  காலை  – பால்டாலில் இருந்து  அமரநாதர் குகைக்கு  நடத்தல்
July – 17- செவ்வாய்  மாலை  – ஸ்ரீ  அமரநாதரை தரிசித்தல்
July- 18 – புதன்  மாலை  – மீண்டும்  பால்டால்  திரும்புதல்
July – 19 – வியாழன்  இரவு  – ஜம்மு  ரயில்  நிலையம்  திரும்புதல்
July – 20 – வெள்ளி  காலை  – ஜம்முவில்  இருந்து  உஜ்ஜைன்  செல்லுதல்
July – 21 – சனி  காலை  – உஜ்ஜைன்  அடைதல்
July – 21 – சனி  மாலை  – உஜ்ஜைனில்  இருந்து  போபால்  அடைதல்
July – 21- சனி  இரவு  – போபால்  ரயில்  நிலையம்  இறங்குதல்
July – 22 – ஞாயிறு  – அதிகாலை  – சென்னை  ரயில்  ஏறுதல்
July – 23 – திங்கள்  காலை  – சென்னை  திரும்புதல்

அமரநாதர் திருவடி தேடி எங்கள் யாத்திரை தொடங்கியது......

ஜூலை 14 – காலை 4 மணிக்கு இல்லத்தில் நமசிவாய கோஷத்துடன் கிளம்பினோம்......

காலை  6.10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி(Hazrath Nizamudin) செல்லும் GaribRath ரயில் [3AC] கிளம்பியதுஜெய் போலேநாத் என்ற கோஷத்துடன் பயணத்தை இறைவன் எங்களுள்  இருந்து ஆரம்பித்து வைத்தார் .

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.

சிவனடியார்கள் தத்தம் இல்லத்திலிருந்து  முடிந்த  அளவிற்கு  உணவு  பொட்டலங்கள்பிஸ்கட்பழங்கள்  மற்றும்  தின்பண்டங்களை  தயார்  செய்து  எடுத்து  வந்திருந்தனர்அந்த  உணவு  பொருள்கள்  பயணம்  முழுமைக்கும்  பெரும்  பசி  ஆற்றியது

உரையாடல்களுடனும் ஏற்கனவே செய்த யாத்திரைகளின் போது கிட்டிய சிவ தரிசன அனுபவங்களை அசை போட்டபடி பிரயாணத்தை தொடர்ந்தோம்......

ரயில் இந்தியாவின் தெற்கிலிருந்து மத்திய மாநிலங்களை தாண்டி வடமாநிலத்தை நோக்கி வேகமாக சென்றது.. மனமோ ரயிலை விட வேகமாக அலைந்து கொண்டிருந்தது...........
கட்டுப்படுத்துபவன் யோகி......
கட்டுப்படுத்த முயற்சிப்பவன் மனிதன்........
கட்டுப்படுத்தாதவன் ?!

ஜூலை  15 –
காலை 11மணிக்கு சரியான நேரப்படி ரயில் ஹசரத்நிசாமுத்தீன் ரயில் நிலையத்தை அடைந்ததுஅந்த ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நிலையத்திற்கு மின்சார ரயிலில் பயணிக்க எத்தனித்து  அதன்படி அந்த ரயிலில் சென்றோம்அப்போது  உடன்  வந்த  அன்பரிடம்  யாரோ  பணம்  இல்லாத ஒருவர், ரூபாய்  15000 எடுத்துகொள்ள இறைவன்  ஆணையின்படி  கொடுத்து விட்டார்.

இறைவன் திருவிளையாடலை உணராமல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான  அன்பர்அவரிடம்  வேறு  பணம்  இல்லாததை  எண்ணி மிகவும் வருத்தம் அடைந்தார்.  உடன் வந்த அனைவரும் அவரை தேற்றி அழைத்து வந்தோம் .

பின்பு டெல்லி ரயில் நிலையத்தை பகல் 1மணிக்கு அடைந்தோம்எடுத்து வந்த உணவை உண்டு விட்டு மீதம் உள்ள நேரத்தை செலவிட எண்ணிஉடன் வந்த அன்பர் சிலர் டெல்லி கரோல்பாக்-கு  செல்ல வேண்டும் என்று கூற5பேர் மட்டும் சென்றோம்மற்றவர்கள் ரயில் நிலையத்திலேயே  இருந்தனர்பின்பு மாலை 7மணிக்கு திரும்பிஅங்கேயே குளித்துவிட்டுஇரவு உணவை உண்டபின், இரவு 8.50 மணிக்கு  ஜம்மு  செல்லும்  ரயிலை [சம்பர் கிரந்தி exp] பிடித்தோம் .

டெல்லி கரோல்பாக்கில் நாள் முழுக்க நடந்த களைப்பில் இரயில் பயணத்தில் நன்றாக உறங்கிப் போனோம்.....

மறுநாள்....
இமாலய இறைதேடலின் [ஆம்...இமாலயத்தில் ஒரு இறைதேடல்.. அதே சமயம் இந்தத் தேடல் இமயம் அளவுக்குப் பெரியது !]  ஆரம்பம்..........

இமாலய இறைதேடலின் அனுபவங்கள் மூன்றாவது பகுதியில் தொடரும்.........

No comments: